பிங்கிரிய ஏற்றுமதி அபிவிருத்தி வலய திட்டம் நாளை திறப்பு

Published By: Vishnu

03 Mar, 2019 | 05:10 PM
image

பிங்கிரிய ஏற்றுமதி அபிவிருத்தி வலய திட்டத்தினை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை திங்கட்கிழமை ஆரம்பித்து வைக்கவுள்ளார். 

15 ஆண்டுகளுக்கு பின்னர் இவ்வாறானதொரு பாரிய ஏற்றுமதி வலயம் இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இதனூடாக நேரடி சர்வதேச முதலீடுகள் , ஏற்றுமதி மற்றும் தொழில் வாய்ப்புக்கள் ஊடாக தேசிய பொருளாதாரத்திற்கு புதிய ஒரு சக்தியாக அமையும் என சர்வதேச வர்த்தக பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்தார். 

பிங்கிரிய ஏற்றுமதி அபிவிருத்தி வலயம் மூன்று கட்டங்களாக முன்னெடுக்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் முதல் கட்டமாக 164 ஏக்கர் நிலப்பரப்பில் 25 புதிய தொழிற்சாலைகள் ஸ்தாபிக்கப்படவுள்ளன. இதனூடாக பத்தாயிரத்துக்கும் அதிகமான நேரடி தொழில் வாய்ப்புக்கள் கிடைக்கப்பெறும். 

இதன் இரண்டாவது கட்டமாக 282 ஏக்கர் நிலப்பரப்பில் தொழிற்சாலைகள் என பல்வேறு முதலீடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. 25 ஆயிரத்துக்கும் அதிகமான நேரடி தொழில் வாய்ப்புக்கள் கிடைக்கும். 

அது மாத்திரமல்லாது இதன் மூன்றாவது கட்ட அபிவிருத்தியில் பிங்கிரய ஏற்றுமதி அபிவிருத்தி வலயத்திற்காக 1200 ஏக்கர் நிலப்பரப்பு ஸ்தாபிக்கப்படுகின்ற புதிய தொழிற்சாலைகளினூடாக 75 ஆயிரத்துக்கும் அதிகமான தொழில் வாய்ப்புக்கள் கிடைக்கப்பெறும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39