பாரிய முதலீட்டில் லொஜிஸ்டிக்ஸ் ஹப் ஒன்றை நிறுவ LogiPark International (Pvt) Ltd நடவடிக்கை

Published By: Priyatharshan

03 Mar, 2019 | 03:38 PM
image

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி குழுமத்தின் முழு உரிமையாண்மையின் கீழ் இயங்கும் துணை நிறுவனமான LogiPark International (Pvt) Ltd (LPI), John Keells Logistics (Pvt) Ltd (JKLL) இன் துணை நிறுவனமும் இலங்கை சந்தையில் பிரதான மூன்றாம் தரப்பு Logistics Services Provider (LSP) சேவை வழங்குநரும் இணைந்து, ஒன்றிணைக்கப்பட்ட லொஜிஸ்டிக் நிலையமொன்றை முதுராஜவெல பகுதியில் நிறுவ முன்வந்துள்ளன.

இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு அண்மையில் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கிரிஷான் பாலேந்திரா, குரூப் நிதி பணிப்பாளரும் பிரதி தலைவருமான கிஹான் கூரே மற்றும் பலரின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது.

மதிப்பிடப்பட்ட US$ 14 மில்லியன் முதலீட்டுடனும், 230,000 சதுர அடிக்கும் அதிகமான நிலப்பரப்பிலும் நிறுவப்படவுள்ள LogiPark International integrated logistics நிலையத்தின் செயற்பாடுகள் 2020 மார்ச் மாத இறுதியில் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனூடாக சுமார் 40,000 CBM களஞ்சியப்படுத்தல் திறனை ஏற்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுவதுடன், மாதாந்தம் 300,000 CBM ஐ விட கையாளக்கூடிய திறனையும் கொண்டிருக்கும். பல் துறைசார் களஞ்சியப்படுத்தல் பகுதிகளுக்கு மேலாக, இந்த நிலையத்தில் பல்-வரிசையான, பெறுமதி சேர்க்கப்பட்ட சேவை (VAS) பகுதிகள் காணப்படும் இவற்றினூடாக வேகமாக வளர்ந்து வரும் நுகர்வோர் பொருட்கள், ஆடை உற்பத்தித் துறை, இலத்திரனியல், இரசாயன பொருட்கள், லுப்ரிகன்ட்கள், தொலைத்தொடர்பாடல், பழுதடையும் பெருட்கள் மற்றும் வியாபார பொருட்கள் போன்ற துறைகளுக்கு சேவைகளை பெற்றுக் கொடுக்கக்கூடியதாக இருக்கும். இந்த VAS பகுதிகள் நவீன தொழில்நுட்ப உள்ளம்சங்களை கொண்டிருக்கும் என்பதுடன் தன்னியக்க செயற்பாடு தயாரிப்பு பொதியிடல் போன்ற செலவு கட்டுப்படுத்தக்கூடிய சேவை விநியோக உள்ளம்சங்களை கொண்டிருக்கும் என்பது அவை உலக தரங்களுக்கமையவும் காணப்படும். இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பை அண்மித்து இந்த நிலையம் அமையவுள்ளதுடன் விமான நிலையம், துறைமுகம் போன்றவற்றை அண்மித்து அமையவுள்ளதால், இணைப்புகளை ஏற்படுத்துவதற்கு இலகுவாக அமைந்திருக்கும்.

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸின் போக்குவரத்து துறை தனது 3PL பிரிவான JKLL ஊடாக வெவ்வேறு துறைகளுக்கு சேவையாற்றி வருகிறது. இதில் உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளின் துறைசார் முன்னோடிகள் உள்ளடங்கியுள்ளனர். சிறந்த வசதி உட்கட்டமைப்பு, களஞ்சிய முகாமைத்துவ கட்டமைப்புகள், களஞ்சியப்படுத்தல் தீர்வுகள் மற்றும் கையாளல் சாதனங்கள் போன்றவற்றினூடாக நிறுவனத்தினால் உயர் மட்ட உலர் மற்றும் குளிர் லொஜிஸ்டிக் நிலையங்கள் செயற்படுத்தப்படுகின்றன. இந்த புதிய வளாகம், நிறுவனத்தின் குளிர் களஞ்சியப்படுத்தல் பிரசன்னம், போக்குவரத்து தொகுதி மற்றும் பிராந்திய சேவைகள் இலாகாவை உள்ளடக்கிய குரூப்பின் நீண்ட கால சேவை தர வளர்ச்சித் திட்டத்தின் ஒரு அங்கமாக அமைந்துள்ளது.

இந்நிகழ்வில் LPI மற்றும் JKLL இன் பிரதம நிறைவேற்று அதிகாரி செனத் ஜயதிலக கருத்துத் தெரிவிக்கையில்,

இலங்கையின் சரக்கு கையாளல் துறை வளர்ச்சியடைந்து, சர்வதேச விநியோகத் தொடர்களுடன் தொடர்பை பேண ஆரம்பித்துள்ள நிலையில், LogiPark International இன் உலகத் தரம் வாய்ந்த ஒன்றிணைக்கப்பட்ட லொஜிஸ்டிக் நிலையமொன்றை நிறுவ முன்வந்துள்ளமையானது, உள்நாட்டு மற்றும் சர்வதேச செயற்பாட்டாளர்களுக்கு தமது விநியோக வினைத்திறன் மற்றும் இயக்கத்திறனை மேம்படுத்த உதவியாக அமைந்திருக்கும்.” என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58