ஞாயிறு சந்தையில் அதிக விலையில் பொருட்கள் விற்கப்படுவதாக மக்கள் விசனம்

Published By: Digital Desk 4

03 Mar, 2019 | 03:15 PM
image

மஸ்கெலியா பிரதேச சபையால் மஸ்கெலியா நகரில் ஏற்படுத்தபட்ட வராந்த ஞாயிறு சந்தையில் மஸ்கெலியா நகர் வர்த்தகர்கள் மட்டுமே வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். மேலும் இங்கு வர்த்தக நிலையங்களில் விற்பனை செய்யும் விலையை விட அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யபடுகின்றது.  ஆகையால் “இதை வாராந்த சந்தையாக கூற முடியாது” என அங்கு பொருட்களை கொள்வனவு செய்யும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் கிராம புறங்களில் உள்ள சகலருக்கும் இங்கு சந்தை நடைபெறுகின்றது என தெரிந்தால் மட்டுமே அது முறையாக இயங்கும். இதற்கு மஸ்கெலியா பிரதேசசபை முன்வந்து கிராம புறங்களுக்கு அறிவித்தல் வழங்குவதன் மூலம் நுவரெலியா, தலவாகல,  கொட்டகல, ஹட்டன், பொகவந்தலாவ,  நோர்வுட்  கினிகத்தேன, நாவலபிட்டிய போன்ற நகரங்கள் மற்றும் ஏனைய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் வந்து தங்களது பொருட்களை விற்றுவிட்டு அவர்களுக்கு தேவையானவற்றை நகரில் பெற்று செல்வர். 

இதனால் நகருக்கு ஏனைய பகுதிமக்கள் வருவதும் அதிகரிக்கும் வர்த்தகர்கள் நன்மையடைவர். பாவனையாளர்களும் குறைந்த விலையில் பொருட்களை பெற்றுக்கொள்ளவர்.

அதனைவிடுத்து நகரில் உள்ளோரே இவ்வாறு வியாபாரம் மேற்கொள்வதன் மூலம் பயனில்லை என பாவனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆகவே இதற்கு சம்மந்தபட்ட மஸ்கெலியா பிரதேசசபை முன்வந்து உடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாவனையாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53