(பழுலுல்லாஹ் பர்ஹான்)

சுற்றுலா பயணி ஒருவரின் ஆப்பிள் ஐ போன் ஒன்றை குரங்கு ஒன்று தூக்கிச் சென்றுள்ள சம்பவம் பொலன்னறுவையில் பதிவாகியுள்ளது.

பொலன்னறுவை மாவட்டத்தில் தற்போது குரங்குகளின் அட்டகாசம் காணப்படுவதாகவும்  இதனால் பொலன்னறுவைக்கு வருகைத்தரும் சுற்றுலா பயணிகள் அதிகம் சிரமத்தை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் மேற்படி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட  சுற்றுலா பயணிகளில் ஒருவரான ஏ.எம்.சப்ரி கருத்து தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேசத்தில் இருந்து சுற்றுலாச் சென்ற எங்களுடைய குடும்பம் பொலன்னறுவை கல் விகாரைக்கு முன்பாக அமைந்துள்ள வளைவில் சுற்றுலா பயணிகள் ஓய்வெடுக்கும் இடத்தில் வாகனத்தை நிறுத்தி   சாப்பிட்டுக் கொன்டிருந்தோம்.

இதன் போது அங்கு நடமாடித்திரிந்த குரங்குகள்  எதிர்பாராத விதமாக வாகனத்தின் யன்னலினூடாக உட்புகுந்து அங்கிருந்த பெறுமதிமிக்க ஆப்பிள் கையடக்கத் தொலைபேசி, பணம், சாரதி அனுமதிப் பத்திரம், காப்புறுதி அடங்கிய பையை எடுத்துக்கொன்டு  அடர்ந்த காட்டினுள் ஓடிவிட்டது. இதன் பின்னர் அந்தக் குரங்கு திரும்பி வரவில்லை என்றார்.

 எனவே இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் அரசியல் வாதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.