வரவு,செலவுத்திட்டத்தில் ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடுகளை ஐ.தே.க எதிர்க்க வேண்டும் -முஜிபுர் ரகுமான் கருத்து

Published By: R. Kalaichelvan

02 Mar, 2019 | 04:06 PM
image

(நா.தனுஜா)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட அரசியல் சதிப்புரட்சி தோற்கடிக்கப்பட்ட பின்னரும் அவர் ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியைத் தாக்கும் வகையிலான கருத்துக்களையே கூறிவருகின்றார்.

 எனவே எதிர்வரும் 5ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத்திட்டத்தில் ஜனாதிபதி செயலகம் அவரது அமைச்சு என்பவற்றுக்கான நிதி ஒதுக்கீட்டிற்கு நாங்கள் எதிராக வாக்களிப்போம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் தெரிவித்தார்.

இவ்வருடத்திற்கான வரவு செலவுத்திட்டம் எதிர்வரும் 5ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில்ரூபவ் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றினை நேற்று சனிக்கிழமை தனது அலுவலகத்தில் ஏற்பாடு செய்து,அங்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நாங்கள் ஒன்றிணைந்தே பதவியில் அமர்த்தினோம்.அவருடன் இணைந்து அரசியல் பயணத்தை முன்nனுடுத்ததுடன் நாட்டில் பல்வேறு மாற்றங்களையும் மேற்கொண்டிருக்கின்றோம். 

ஆனாலும் கடந்த ஒக்டோபர் மாதம் எமக்கும் அவருக்கும் எதிராக இருந்த அரசியல் அணியுடன் இணைந்து இந்நாட்டில் அரசியல் மாற்றமொன்றினை ஏற்படுத்துவதற்கன முயற்சியினை மேற்கொண்டார். ஆனால் அந்த முயற்சி நீதிமன்றத்தால் தோற்கடிக்கப்பட்டதுடன் நாங்கள் மீண்டும் எம்முடைய அரசாங்கத்தை உருவாக்கினோம்.

ஆனாலும் ஜனாதிபதி தற்போது ஐக்கிய தேசியக்கட்சி ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் அதன் தலைவர்களை தாக்கும் வகையிலான கருத்துக்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றார்.

 எனவே எதிர்வரும் 5ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத்திட்டத்தில் ஜனாதிபதி செயலகம் ஜனாதிபதியின் அமைச்சு உள்ளிட்டவற்றுக்கான நிதி ஒதுக்கீட்டிற்கு நாங்கள் ஆதரவளிக்கப் போவதில்லை. 

ஜனாதிபதி தற்போது புதிதாக இணைந்து கொண்டுள்ள அரசியல் அணியினரின் வாக்குகளைப்பெற்று அதனை நிறைவேற்றிக்கொள்ள முயற்சிக்கலாம்.

வரவு,செலவுத்திட்டத்தில் ஜனாதிபதியுடன் தொடர்புடைய ஒதுக்கீடுகளுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும் இருக்கின்றார்.

தற்போது எம்முடைய நிலைப்பாடாக இருக்கின்ற போதிலும் விரைவில் இது ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடாக மாறும். கடந்த காலங்களில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையே ஜனாதிபதி அதிகளவில் தாக்கும் வகையில் செயற்பட்டிருக்கின்றார்.

எனவே அவரும் எம்முடைய நிலைப்பாட்டிற்கு ஆதரவளிப்பார் என எதிர்பார்க்கின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:41:00
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59
news-image

மாஓயாவில் நீராட சென்ற 4 மாணவர்கள்...

2024-03-28 09:50:11