மாத்தறை - கதிர்காமம் பிரதான வீதியில்  பாரிய அரச மரம் ஒன்று  முறிந்து வீழ்ந்தமையால் போக்குவரத்தில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இன்று அதிகாலையே குறித்த மரம் முறிந்து வீழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அதனை வீதியில் இருந்து அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அதுவரை பொதுமக்கள் போக்குவரத்திற்கு மாற்று பாதையினை பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.