பிறக்கவிருக்கும்  தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சிறைக்கைதிகளுக்கு அவர்களது வீட்டில் இருந்து கொண்டு வரும் உணவுகளை கொடுப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக, சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இம் மாதம் 13ம்இ 14ம் திகதிகளில் நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் உள்ள சிறைக்கைதிகளுக்கும் இந்த வாய்ப்பு கிடைக்கவுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி குறித்த இரு நாட்களும் காலை 08.30 மணி முதல் மாலை 04.30 மணி வரை கைதிகளுக்கு உறவினர்கள் தரும் உணவை வழங்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு கொண்டுவரப்படும் உணவுகளை அதிக சோதனைக்கு உட்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் மேலும், கூறியுள்ளார்.