சீனாவுக்கு ரணில் செல்லமுன் ரணில் மஹிந்த பேசி­யது என்ன?

Published By: Raam

11 Apr, 2016 | 08:02 AM
image

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கடந்­த­வாரம் சீனா­வுக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை மேற்­கொள்­வ­தற்கு முன்­ப­தாக புதன்­கி­ழமை காலை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­த­ ரா­ஜ­ப­க்ஷவை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருந்தார்.

பாரா­ளு­மன்றக் கட்­டிடத் தொகு­தியில் நடை­பெற்ற இந்த சந்­திப்பில் பிர­த­ம­ரு டன் அமைச்சர் மலிக் சம­ர­விக்­கி­ர­மவும் முன்னாள் ஜனா­தி­ப­தி­யுடன் ஒன்­றி­ணைந்த எதி­ர­ணியின் தலைவர் தினேஷ் குண­வர்த்­த­னவும் கலந்து கொண்­டி­ருந்­தனர்.

இந்த சந்­திப்­பின்­போது பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சீனா­வுக்கு மேற்­கொள்­ள­வுள்ள தனது விஜயம் குறித்து மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுக்கு விளக்­க­ம­ளித்­தி­ருக்­கிறார். அத்­துடன் புதிய அர­சி­ய­ல­மைப்பை முன்­னெ­டுப்­ப­தற்­கான வேலைத்­திட்டம் தொடர்­பா­கவும் பிர­தமர் விளக்­க­ம­ளித்­துள்ளார்.

அதா­வது நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறைமை முழு­மை­யாக நீக்­குதல் பாரா­ளு­மன்­றத்தைப் பலப்­ப­டுத்­துதல் மற்றும் அதி­கா­ரத்தைப் பகிர்தல் ஆகிய மூன்று விட­யங்­க­ளுக்கே புதிய அர­சி­ய­ல­மைப்பில் முக்­கி­யத்­துவம் அளிக்­கப்­பட்­டுள்­ள­தாக பிர­தமர் தெரி­வித்­துள்ளார்.

அது­மட்­டு­மன்றி தேர்தல் முறை மாற்றம் இதில் பிர­தா­ன­மாக உள்­ள­டக்­கப்­பட்­டி­ருந்­தாலும், மேற்­கு­றித்த மூன்று விட­யங்­க­ளுக்கு முன்­னு­ரிமை அளிக்­கப்­ப­டு­மென பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க விளக்­கி­யுள்ளார்.

இது இவ்­வா­றி­ருக்க முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் இரா­ணுவப் பாது­காப்பு மீளப்­பெ­றப்­பட்­டமை தொடர்­பாக தினேஷ் குண­வர்த்­தன பிர­தமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார். இதற்குப் பதிலளித்த பிரதமர் இது தொடர்பில் தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சு நடத்துவதாக தெரிவித்திருக்கிறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17