இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கிய கடல்வாழ் உயிரினங்கள் பறிமுதல்

Published By: R. Kalaichelvan

28 Feb, 2019 | 01:04 PM
image

சென்னையிலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த 7 கோடி ரூபாய் மதிப்புள்ள பதப்படுத்தப்பட்ட அரிய கடல்வாழ் உயிரினங்களை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

சென்னை மண்ணடி பகுதியில் உள்ள குடோன் ஒன்றில், பதப்படுத்தப்பட்ட அரிய வகை கடல்வாழ் மற்றும் வன உயிரினங்கள் கடத்துவதற்காக வைக்கப்பட்டிருப்பதாக சுங்கத் துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. உடனே, சுங்கத்துறை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அந்த குடோனுக்குச் சென்றனர்.

அப்போது, அதிகாரிகளைப் பார்த்ததும் அங்கிருந்த 2 பேர் தப்பியோட முயன்றனர். அவர்களை மடக்கிப்பிடித்த அதிகாரிகள் குடோனில் சோதனை செய்தபோது, அங்கு பெரிய பிளாஸ்டிக் பைகளில் பதப்படுத்தப்பட்ட கடல் குதிரை, குழாய் மீன்கள், சுறா மீன் குஞ்சுகள், கடல் வெள்ளரி போன்ற கடல்வாழ் உயிரினங்களும், எறும்பு திண்ணி உள்ளிட்ட வன விலங்குகளும் இருந்ததை கண்டுபிடித்தனர்.

பிடிபட்டவர்களிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ராமேஸ்வரம் மற்றும் சென்னை காசிமேடு பகுதிகளில் இருந்து இவற்றை வாங்கி மும்பை வழியாக இலங்கை, சீனா மற்றும் தெற்கு ஆசிய நாடுகளுக்கு கடத்த இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், சர்வதேச சந்தையில் இவற்றின் மொத்த மதிப்பு 7 கோடி ரூபாய் என கண்டறிந்நனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39