குவைத்திலிருந்து 52 பணிப்பெண்கள் நாடு திரும்பினர்

Published By: Daya

28 Feb, 2019 | 01:31 PM
image

குவைத்தில் பணிப்பெண்களாக கடமையாற்றிய 52 பேரை இன்று கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு குவைத்திலுள்ள இலங்கை தூதரகம் அனுப்பி வைத்துள்ளது.  

குறித்த பணிப்பெண்கள் கடமையாற்றிய வீடுகளில் பாரிய நொந்தரவுக்கும் பிரச்சினைக்கும் உள்ளான நிலையில் இன்று அவர்கள் தாய்நாடுதிரும்பியுள்ளனர். 

குறித்த பெண்கள் இன்று காலை 6.35 மணியளவில் குவைத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகைதந்துள்ளனர். 

குறித்த பெண்களின் 6 பேர் இருவருடங்களுக்கு மேலாக குவைத்தில் பணிபுரிந்ததோடு, ஏனைய பெண்கள் அனைவரும் ஒருவருடத்திற்கு குறைவாக பணிப்பெண்களாக கடையாற்றியதாக தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் குறித்த பெண்கள் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியை சேர்ந்தவர்கள் என்பதுடன், குறித்த பெண்கள் குவைத்தில் பணிபுரிந்த காலத்தில் எவ்வித கொடுப்பனவுகளும் கிடைக்கவில்லை என தெரியவந்துள்ளது. 

இந்நிலையில், குறித்த பெண்கள் தங்கியிருந்து பணிப்புரிந்த  வீடுகளில் அடித்து துன்புறுத்தப்பட்டதாகவும் தொந்தரவுக்குள்ளானதாகவும் குவைத்திலுள்ள இலங்கை  தூதரகத்துக்கு அறிவித்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.  

குறித்த பெண்களில் எட்டுப் பேரைத் தவிர ஏனைய 44 பேர் தற்காலிகமான கடவு சீட்டை பயன்படுத்தி இலங்கை வந்துள்ளதுடன் 35 பெண்கள் தமது சொந்தப் பணத்தை செலவழித்து கடவுசீட்டை பெற்று இலங்கை வந்துள்ளனர்.

இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் இவ்வாறு குவைத்திலிருந்து வந்த பணிப் பெண்கள் அவர்களது ஊருக்கு செல்வதற்கான கொடுப்பனவுகளை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01