சரிவிலிருந்த இந்திய அணியை மீட்ட கோலி, தோனி

Published By: Vishnu

27 Feb, 2019 | 08:51 PM
image

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் சரிவிலிருந்து இந்திய அணியை கோலி மற்றும் தோனி இருவரும் இணைந்து மீட்டெடுத்தனர்.

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணியானது இந்திய அணியுடன் இருபதுக்கு 20 மற்றும் ஒருநாள் போட்டித் தொடர்களில் விளையாடி வருகிறது.

இதில் இரண்டு போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரின் முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றிபெற்றுள்ள நிலையில் இவ்விரு அணிகளுக்கிடையேயான இரண்டாவது போட்டி இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று ஆரம்பமானது. 

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணியின் தலைவர் முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்ய இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

அதன்படி அணி சார்பில் ராகுல் மற்றும் தவான் ஆகியோர் களமிறங்கி துடுப்பெடுத்தாட ஆரம்பிக்க ராகுல் அதிரடி காட்ட ஆரம்பித்தார். 

நான்காவது ஓவரின் 4,5 ஆவது பந்துகளில் அடுத்தடுத்து இரு ஆறு ஓட்டங்களையும், அதற்கடுத்த ஐந்தாவது ஓவரின் 4,5 ஆவது பந்து வீச்சிலும் அடுத்தடுத்து இரு ஆறு ஓட்டங்களை விளாசித் தள்ளினார் ராகுல். 

இதனால் இந்திய அணி 6 ஓவர்களின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 53 ஓட்டங்களை பெற்றது. ராகுல் 41 ஓட்டத்துடனும், தவான் 9 ஓட்டத்துடனும் தொடர்ந்தும் துடுப்பெடுத்தாடி வந்தனர்.

எனினும் 7.1 ஆவது ஓவரில் ராகுல் 47 ஓட்டத்துடன் ஆட்மிழக்க, தவான் 9.2 ஆவது ஓவரில் 14 ஓட்டத்துடனும், அடுத்து களமிறங்கிய ரிஷாத் பந்த் 10.5 ஆவது ஓவரில் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இதன் பின்னர் 4 ஆவது விக்கெட்டுக்காக அணித் தலைவர் விராட் கோலியும் தோனியும் களமிறங்கி துடுப்பெடுத்தாட சரிவிலிருந்த இந்திய அணி மீள ஆரம்பித்தது. 

விராட் கோலி 15 ஆவது ஓவரில் அடுத்தடுத்து மூன்று அடுத்தடுத்து மூன்று ஆறு ஓட்டங்களை விளாசித் தள்ள இந்திய அணி 16 ஓவர்களுக்கு 135 ஓட்டங்களை பெற, விராட் கோலி 16.5 ஆவது பந்தில் 29 பந்துகளை எதிர்கொண்டு 4 ஆறு ஓட்டம், ஒரு நான்கு ஓட்டம் அடங்களாக அரைசதம் விளாசினார்.

மறுமுணையில் தோனியும் 18 ஆவது ஓவரில் 2 ஆறு ஓட்டம ஒரு நான்கு ஓட்டங்களை விளாசி அதிரடி காட்ட ஆரம்பிக்க இந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கை வேகமாக அதிகரித்தது.

ஒரு கட்டத்தில் இந்திய அணி 19 ஆவது ஓவரில் 3 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 174 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை தோனி 19.1 ஆவது பந்து வீச்சில் 23 பந்துகளை எதிர்கொண்டு 3 நான்கு ஓட்டம், 3 ஆறு ஓட்டங்கள் அடங்களாக 40 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

இவரின் ஆட்டமிழப்பையடுத்து களமிறங்கிய தினேஸ் கார்த்தக்கும் அதிரடி காட்ட விராட் கோலி இறுதிப் பந்தில் 6 ஓட்டத்துடன் 20 ஓவர்களையும் முடித்து வைத்தார். இதனால் இந்திய அணி 20 ஓவர்களின் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 190 ஓட்டங்களை பெற்றது.

ஆடுகளத்தில் விராட் கோலி 72 ஓட்டத்துடனும், தினேஷ் கார்த்திக் 8 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35