கிளிநொச்சி மாவட்டத்தின் சில பாடசாலைகளுக்கு ஆளுநர் திடீர் கண்காணிப்பு விஜயம்

Published By: R. Kalaichelvan

27 Feb, 2019 | 01:01 PM
image

கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள இரு பாடசாலைகளுக்கு  ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்  இன்று காலை திடீர் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.

கடந்த வருட இறுதியில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கினால் பாதிப்படைந்த 11 பாடசாலைகளை புனரமைப்பதற்காக ஆளுநர் வேண்டுகோளுக்கு இணங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த மாதம் 31.5 மில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டது. 

இந்த நிதி ஒதுக்கீட்டில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள 8 பாடசாலைகளும் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 3 பாடசாலைகளும்  புனரமைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

குறித்த புனரமைப்பு நடவடிக்கைகளின் நிலைமை குறித்து  ஆராய்வதற்காகவே ஆளுநர் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள முருகானந்தா ஆரம்ப பாடசாலை மற்றும் புனித அந்தோனியார் றோமன் கத்தோலிக்க வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கு திடீர் கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்டார்.

இந்த விஜயத்தின்போது பாடசாலை  மாணவர்களுடனும் அதிபர் ஆசிரியர்களுடனும் சினேகபூர்வமாக கலந்துரையாடிய ஆளுநர் அவர்கள் மாணவர்களின்  தேவைகள் குறித்தும் கேட்டுக்கொண்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41