அவசரமாக கூடும் ஐ.தே.க.வின் செயற்க்குழு 

Published By: Vishnu

27 Feb, 2019 | 08:39 AM
image

(நா.தினுஷா) 

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்க்குழு கூட்டம் அவசரமாக இன்று கூடுகின்றது. 

இந்த செயற்குழு கூட்டம் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெறவுள்ளதுடன் இதன்போது அரசியல் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு துறைசார் பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் ஐக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளது.

விசேடமாக  ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவின் ஆதரவுடன் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களுக்கு இணை அனுசரணை வழங்குவதாக குறிப்பிட்டு அதற்கான ஒத்துழைப்புக்களையும் இலங்கை வழங்கி வந்திருந்தது. மேலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர் நேற்று முன்தினம் ஆரம்பமாகியுள்ளது. 

இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதுவரைகாலமும் இலங்கையினால் இணை அனுசரணை வழங்கி வந்த குறித்த தீர்மானங்களிலிருந்து விலக தீர்மானித்துள்ளதாகவும், அது தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற்றுவருவதாகவும் அறிவித்திருந்தார். 

இவ்விடயம் குறித்து ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. 

மேலும் இதன்போது ஜனாதிபதி தேர்தல் மற்றும் மாகாண சபை தேர்தல்கள் தொடர்பில் கட்சி ரீதியில் ஆராயப்படும் என எதிர்பாரக்கப்படுகின்றது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31