பாகிஸ்தான் உளவு விமானத்தை இந்திய இராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது

Published By: R. Kalaichelvan

26 Feb, 2019 | 03:17 PM
image

பாகிஸ்தானின் எல்லைப் பகுதியான குஜராத்தின் கட்ச் பகுதியில் நேற்று இரவு உளவு விமானம் சுற்றித் திரிந்துள்ளது. இதைக் கண்ட இந்திய இராணுவம், அம்பாசா கிராமத்தில் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது.இதைத் தொடர்ந்து விமானத்தின் பகுதிகள் உடைந்து கீழே சிதறின. இராணுவ அதிகாரிகளும் உள்ளூர் காவல்துறையும் சம்பவ இடத்துக்கு விரைந்தன.சேதமடைந்த விமான பாகங்களைச் சேகரித்து, அவற்றைப் பரிசோதிக்கும் பணி நடந்து வருகிறது.

இதனிடையே புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய மிராஜ் வகைப் போர் விமானங்கள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது  இன்று தாக்குதல் நடத்தி அவற்றை முற்றிலுமாக அழித்தது. 

ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தினர் தங்கியிருந்த பாலாகோட் தீவிரவாத முகாம் மீதான தாக்குதலில் ஏராளமான தீவிரவாதிகள், தற்கொலைப் படையினர்  கொல்லப்பட்டதாக வெளியுறவுத்துறை செயலர் விஜய் கோகலே தெரிவித்துள்ளார்.

ஆனால் இத்தாக்குதலை பாகிஸ்தான் மறுத்துள்ளது.

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் கடந்த 14 ஆம் திகதி  சி.ஆர்.பி.எப் வீரர்கள் மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினார். இதில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்துக்கு பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்தத் தாக்குதல் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47