மக்கள் விரும்பாத தீர்வை நாம் ஏற்க மாட்டோம் - இரா.சம்பந்தன்  

Published By: R. Kalaichelvan

26 Feb, 2019 | 12:22 PM
image

அரசியல் யாப்பு சீர்திருத்த முயற்சி ஆரம்பிக்கபட்டு பல படிமுறைகளை கடந்து சென்றுள்ளது.அதனை தொடர்ந்து நீடிக்காமல் அதனை அமுல்படுத்த வேண்டும். 

அதற்கான முயற்சிகளை நாம் நிதானமாக முன்னெடுத்து வருகின்றோம்.அதற்காக இந்த அரசியல் ஸ்திரமற்ற நிலைக்கு பின்னர் ஜனாதிபதியையும் பிரதமரையும் ஒன்றாக சந்தித்துள்ளேன்.

எதிர்வரும் 28 ஆம் திகதியும் பேச இருக்கின்றோம். அதில் அனைத்து கட்சித் தலைவர்களையும் அழைக்குமாறு அரசாங்கத்திடம் நான் கோரி இருக்கின்றேன் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

நேற்றய தினம் மாலை திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற இலங்கை தமிழரசு கட்சியின் மாவட்டக்கிளை பிரதேசக்கிளை மூலக்கிளை பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் திருகோணமலை மாவட்டத்தின் தென்னமரவடி முதல் வெருகல் வரையிலான சகல கிராமங்களிலும் இருந்து கட்சிக் கிளை பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் பாராளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்டக்கிளைத் தலைவர் ச.குகதாசன மாவட்டக்கிளைத் செயலாளரும் முன்னால் நகரசபை தலைவருமான க.செல்வராஜா திருகோணமலை நகராட்சி மன்றத் தலைவர் நா.இராஜநாயகம் பட்டிணமும் கூழலும் பிரதேசசபை தலைவர் ஜி.ஞானகுணாளன் வெருகல் பிரதேசசபை தலைவர் சந்தரலிங்கம் உற்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

தொடர்ந்து அவர் உரையாற்றும் போது,

 சகலரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய நடைமுறைப்படுத்தக் கூடிய ஒரு புதிய அரசியல் யாப்பை கொண்டு வர வேண்டும்.அதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனும் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க உடனும் எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்கசவுடனும் பணியாற்ற நாம் தயார் எமக்கு எவறும் எதிரிகள் அல்ல என்றார்.

மேலும் 1987ம் ஆண்டு இந்திய அரசாங்கத்தின் அனுசரனையுடன்  கொண்டுவரபட்ட 13வது அரசியல் யாப்பின் படி முதன் முறையாக அதிகாரம் பகிரபட்டது.அன்று முதல் இன்றுவரை எமது பயணம் தொடருகின்றது.தற்போது பாராளுமன்றம் ஒரு அரசியல் யாப்பு பேரவையாக மாற்றப்பட்டுள்ளது.உபகுழுக்கள் அமைக்கபட்டு அறிக்கை சமர்பிக்கபட்டுள்ளது.அதன் பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது.எனினும் 2016 ஆரம்ப்பிக்கபட்ட இந்த அரசியல் யாப்பு சீர்திருத்தப்பணி தொடரமுடியாது  அந்த நடவடிக்கை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் அதற்கான முயற்சியிலும் நாம் ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றோம்.

இந்த நாட்டை ஆண்ட முன்னால் ஜனாதிபதிகளான அம்மையார் சந்திரிக்கா பண்டார நாயக்க மற்றும்  மகிந்த ராஜபக்க போன்றோராலும் தற்போதய அரசாங்கத்தாலும் பல்வேறு அரசியல் தீர்வு திட்டங்கள் கொண்டு வரப்பட்டது.பலவிதமான அறிக்கைகள் எம்மிடம் உள்ளது பல நிபுணர்களின் அறிக்கையும் உள்ளது.இவை எல்லாவற்றையும் வைத்து நல்ல தீர்வு ஒன்று கொண்டு வரப்பட வேண்டும்.அதற்காக நாம் செயற்படுகின்றோம்.

ஒரு தீர்வுத் திட்டத்தை கொண்டு வரும் போது மக்களின் கருத்தை நாம் கேட்போம் ஆலோசனைகளைப் பொறுவோம்.பல்வேறு நாடுகளில் உள்ள நடைமுறைகளை ஆராந்து தான் நாம் ஏற்போம்எமது மக்களின் குறைகளை தீரக்கக் கூடிய தேவைகளை பூத்தி செய்யக் கூடிய ஒரு தீர்வையே நாம் ஏற்போம். மாறாக எமது மக்கள் விரும்பாத மக்களுக்கு நன்மை அளிக்காத எந்த ஒரு தீர்வையும் நாம் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 21:07:31
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10