மோடியிடம் கால அவகாசம் கேட்ட இம்ரான் கான்

Published By: Vishnu

25 Feb, 2019 | 12:01 PM
image

புல்வாமா தாக்குதலில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அவகாசம் தாருங்கள் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காஷ்மீர் புல்வாமா  தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்ததுடன் சம்பவத்திற்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பொறுப்பேற்றிருந்தது. 

அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தி வந்தநிலையில், பாகிஸ்தான் அதனை பொருட்படுத்தவில்லை. இதையடுத்து இந்தியா – பாகிஸ்தான் உறவில் கடும் விரிசல் உண்டானது.

இதனால் பாகிஸ்தான் மீதான இறக்குமதி வரி 200 சதவீதமாக உயர்த்தப்பட்டது. சர்வதேச நாடுகள் பாகிஸ்தான் மீது அழுத்தம் கொடுக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய மத்திய அரசு செய்தது. 

இந்த நிலையில் ராஜஸ்தான் பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை பார்த்து அவர் ஒரு பதான் இனத்தை சேர்ந்தவராக இருந்தால், அந்த இனத்தின் பெயரை காப்பாற்றுங்கள் என்று பேசினார்.

(பதான் இனம் ஈரானை பூர்வீகமாக கொண்டது. அவர்கள் நீதி நேர்மைக்கு பெயர் பெற்றவர்கள் என்று பரவலாக பேசப்படுகிறது.) 

மோடியின் இந்த பேச்சுக்கு பதிலளித்து பேசிய இம்ரான் கான், புல்வாமா தாக்குதலில் தொடர்புடையவர்கள் பாகிஸ்தானில் இருக்கிறார்கள், பாகிஸ்தானுக்கும் தாக்குதலில் தொடர்பு உண்டு என்பதற்கான ஆதாரங்களை அளித்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு இந்தியா கால அவகாசம் தர வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13
news-image

அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிரான வழக்கு...

2024-03-26 17:06:35