இலங்கைக்கு நிதி வழங்க சர்வதேச நாணய நிதியம் அனுமதியளித்துள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

ஆசிய முதலீட்டு மாநாட்டில் கலந்துக்கொண்டு நாடு திரும்பிய பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

மேலும் இலங்கை எதிர்பார்க்கும் குறித்த நிதியுதவியை எதிர்வரும் மூன்று வாரத்திற்குள் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் ஜப்பானில் இடம்பெற்ற வரி சம்பந்தமான மாநாட்டின் போது, இலங்கைக்கு வருமானத்தை ஈட்டிக்கொள்ளும் வழிமுறைகள் சம்பந்தமாக சர்வதேச நாணய நிதியத்துடன் விரிவாக கலந்துரையாடியதாகவும் நிதியமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.