ஸ்திரமான அரசாங்கமொன்று தற்போது நாட்டில் இல்லை ;  கோத்தா

Published By: Digital Desk 4

24 Feb, 2019 | 10:58 AM
image

ஸ்திரமானதும், பலமானதுமான அரசாங்கமொன்று நாட்டில் இல்லாத காரணத்தினால், வெளிநாட்டு முதலீடுகளை கொண்டுவர முடியாதுள்ளதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த நிலைமை தொடருமாயின் நாட்டில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வது கடினமானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

திவுலபிடியவில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற எளிய அமைப்பின் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், 

“எவ்வாறானதொரு நாட்டை நாம் எதிர்க்காலத்தில் ஸ்தாபிக்க வேண்டும் என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். கடந்த காலங்களில் பலமான அரசாங்கம் இருந்தமையாலேயே, வெளிநாட்டு முதலீடுகள் இங்கு கொண்டுவரப்பட்டன. முதலீட்டாளர்கள் அச்சமின்றி இருந்தார்கள்.

ஆனால், இந்த அரசாங்கம் வந்தவுடன் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. அரசாங்கங்கள் மாறியவுடன் அபிவிருத்தி செயற்பாடுகள் நிறுத்தப்படுமாகவிருந்தால், நிச்சயமாக முதலீடுகளை செய்ய எவரும் முன்வர மாட்டார்கள்.

இதன்விளைவாகவே 4 வருடங்கள் கடந்தும், இந்த அரசாங்கத்தால் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள முடியாது உள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36
news-image

அட்டன் – கொழும்பு மார்க்கத்தில் மாத்திரமே...

2024-04-18 16:20:52
news-image

கண்டி நகரில் தீவிரமடையும் குப்பை பிரச்சினை!

2024-04-18 16:31:50
news-image

காத்தான்குடி பாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின்...

2024-04-18 15:52:14
news-image

பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2024-04-18 15:42:00
news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39