(க.கிஷாந்தன்)

அட்டன் - எபோட்சிலி தோட்டத்தில் மாஸ்க் பிரிவில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த  2 ஆண் தொழிலாளர்கள் குளவி தாக்குதலுக்கு இலக்காகி டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் இன்று காலை  9.30 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

மரத்திலிருந்த குளவி கூடே இவ்வாறு கலைந்து வந்து தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட  2 தொழிலாளர்களும் சிகிச்சை பெற்று வருவதாகவும் சிகிச்சையின் பின் வீடு திரும்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.