யாழில் பெற்ரோல் குண்டுத்தாக்குதல் மேற்கொண்ட நபர்களுக்கு விளக்கமறியல்:நீதவான் உத்தரவு

Published By: R. Kalaichelvan

23 Feb, 2019 | 01:26 PM
image

யாழ்ப்பாணம் கொக்குவில்  பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்ரோல் குண்டுத்தாக்குதல் மேற்கொண்டவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் நால்வரும் 14 நாள்களுக்கு விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தாக்குதலை நடத்தியவர்களில் ஒருவர் கொழும்புக்குத் தப்பி ஓடிவிட்டார் எனவும் மற்றொருவர் தலைமறைவாகியிள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் கொக்குவில்  கருவப்புலம் வீதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், வீட்டின் முன் பக்கம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டன.

வன்முறையை அடுத்து துரித விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டன. கோப்பாய் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியாக சுப்ரமணியம் தவக்குமார் நியமிக்கப்பட்டார். அத்துடன், வவுனியாவிலிருந்து 50 பொலிஸார் மேலதிகமாக அழைக்கப்பட்டனர். அவர்கள் வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

சம்பவ நடைபெற்ற அன்றைய தினம், பெற்ரோல் குண்டு வீச வந்த இளைஞர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள்கள் கருவப்புலம் வீதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி காணொலின் மூலம் அடையாளம் காணப்பட்டன. அத்துடன், எரிபொருள் நிரப்பு நிலையத்துக்குச் சென்று கலன் ஒன்றில் பெற்றோல் நிரப்பும் சி.சி.ரி.வி காட்சியும் பெறப்பட்டு விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டன.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் அடிப்படையில் 4 பேர்  நேற்றுமுன்தினம் இரவு கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து வாள்கள், கோடாரிகள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களும் மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டன.

சந்தேகநபர்கள் நால்வரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டு நேற்று  மாலை யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பி.போல் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.

வழக்கை விசாரித்த நீதிவான், சந்தேகநபர்கள் நால்வரையும் மார்ச் 7ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53