பன்னிப்பிட்டியவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பன்னிப்பிட்டிய அரலிய உயன பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 35 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த துப்பாகிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.