2018 ஆம் ஆண்டிற்கான படைத் தலைமயகங்களுக்கிடையிலான காரப்பந்தாட்டப் போட்டியில் இலங்கை இராணுவ போர்க் கருவிப் படையினர் வெற்றி பெற்றனர்.

2018 ஆம் ஆண்டிற்கான படைத் தலைமயகங்களுக்கிடையிலான காரப்பந்தாட்டப் போட்டிகள் பனாகொடை உள்ளக அரங்கில் நேற்று இடம்பெற்றது. 

இந் நிகழ்வில்பிரதம அதிதியாக லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க கலந்து கொண்டதோடு இராணுவ அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

2018 ஆம் ஆண்டிற்கான வருடாந்த காரப்பந்தாட்டப் போட்டிகளில் விஜயபாகு காலாட் படையணி மற்றும் இலங்கை இராணுவ போர்க் கருவிப் படையினர் போன்ற குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற இறுதிச் சுற்றுப் போட்டிகளில் இலங்கை இராணுவ போர்க் கருவிப் படையினர் வெற்றி பெற்றதோடு இரண்டாம் இடத்தை விஜயபாகு காலாட் படையணி மற்றும் மூன்றாம் இடத்தை இலங்கை சிங்கப் படையினர் போன்றோர் பெற்றுக் கொண்டனர்.

இதன் போது இந் நிகழ்வில் கலந்து கொண்ட இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க, வெற்றியீட்டிய போட்டியாளர்களுக்கான பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.

அதேவேளை 2018ஆம் ஆண்டிற்கான விளையாட்டுப் போட்டிகளின் போது சான்றிதழ் நிகழ்வுகளும் இடம்பெற்றது. 

இந் நிகழ்வில் பிரதிப் பதவிநிலைப் பிரதானியான மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன மற்றும் விஜயபாகு காலாட் படையணியின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸ் அத்துடன் இராணுவ தொண்டர் படையணியின் மற்றும் இலங்கைப் பீரங்கிப் படையணியின் தளபதிகள் போன்றோரும் கலந்துகொண்டனர்.