தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்தும் நட்சத்திரக் கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றவுள்ள வீரர்களின் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நடிகர் சங்கம் நடத்தும் நட்சத்திரக் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 17 ஆம் திகதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. 

8 அணிகள் பங்குபற்றும் 6 ஓவரகள் கொண்ட இப் போட்டியில் 8 அணிகளுக்குமான அணித் தலைவர்கள் மற்றும் அணியில் இடம்பெற்றுள்ள நட்சத்திரங்களின் பெயர்கள்  அறிவிக்கப்பட்டுட்டன.

இதில் நடிகைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

மேலும் ஒவ்வொரு அணிக்கும் விளம்பரத் தூதர்களாக முன்னணி நடிகைகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இந்த போட்டியில் அஜீத், விஜய், விக்ரம், சிம்பு, தனுஷ் போன்ற நடிகர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சங்க கிரிக்கெட் அணியில் இடம்பெறவிருக்கும் வீரர், வீராங்கனைகளின் பட்டியல் இதோ ;

சென்னை சிங்கம்ஸ் 

நடிகர்கள்: சூர்யா (அணித் தலைவர்),விக்ராந்த், சிவா, உதய், நந்தா, அருண் விஜய், அர்ஜுன். 

நடிகைகள்: ஹன்சிகா, கீர்த்தி சாவ்லா, கௌரி முங்கல், திவ்யா, ருக்மணி. 

மதுரை காளைஸ் 

நடிகர்கள்: விஷால்(அணித் தலைவர்), ரிஷி, சூரி, அருள்நிதி, ரமணா, ஆர்.கே.சுரேஷ், மன்சூர் அலிகான். 

நடிகைகள்: வரலட்சுமி, ஜனனி ஐயர், நிகில் கல்ராணி, சாந்தினி, மதுமிதா. 

கோவை கிங்ஸ் 

நடிகர்கள்: கார்த்தி(அணித் தலைவர்), பரத், விஷ்ணு, சஞ்சய், மகேந்திரன், ஜே.கே.ரித்திஷ், பிரசாந்த். 

நடிகைகள்: தமன்னா, மது ஷாலினி, சிருஷ்டி டாங்கே, மும்தாஸ் மிஸா, அபிநயஸ்ரீ. 

நெல்லை ட்ராகன்ஸ் 

நடிகர்கள்: ஜெயம் ரவி(அணித்தலைவர்), அரவிந்த்சாமி, விஜய் வசந்த், சவுந்தர் ராஜா, பிருத்வி, அஸ்வின் சேகர், வைபவ். 

நடிகைகள்: ஸ்ரீதிவ்யா, நமீதா, மனிஷா யாதவ், விஜயலட்சுமி, கோமல் சர்மா, பார்வதி நாயர். 

ராம்நாடு ரைனோஸ் 

நடிகர்கள்: விஜய் சேதுபதி(அணித் தலைவர்), ஜெய், கலையரசன், போஸ் வெங்கட், வருண் ஐசரி கணேஷ், சக்தி, அருண்பாலாஜி. 

நடிகைகள்: ரம்யா நம்பீசன், சோனியா அகர்வால், வசுந்தரா, காயத்ரி, ரித்விகா. 

தஞ்சை வாரியர்ஸ் 

நடிகர்கள்: ஜீவா (அணித் தலைவர்), லக்‌ஷ்மண், அசோக், ஷரண், பசுபதி, அதர்வா, பிளாக் பாண்டி. 

நடிகைகள்: அமலாபால், தன்ஷிகா, நிகிஷா பட்டேல், ஃப்ளோரா ஷைனி, சஞ்சனா சிங். 

திருச்சி டைகர்ஸ் 

நடிகர்கள்: சிவகார்த்திகேயன் (அணித் தலைவர்), ஷாம், விக்ரம் பிரபு, அசோக் செல்வன், நிதின் சத்யா, சதீஷ், ஸ்ரீமன், ஹேமச்சந்திரன். 

நடிகைகள்: கீர்த்தி சுரேஷ், சாயா சிங், காயத்ரி ரகுராம், தேஜாஸ்ரீ, வேதிகா. 

சேலம் சீட்டாஸ் 

நடிகர்கள்: ஆர்யா (அணித் தலைவர்), கார்த்திக் முத்துராமன், ஆதவ், உதயநிதி,உதயா,ஜித்தன் ரமேஷ்,செந்தில். 

நடிகைகள்: பிந்து மாதவி, நந்திதா, பூனம் கவுர், ரகசியா, சுஜா வரூனி. 

இந்நிலையில், சிவா, குஷ்பூ இருவரும் இப்போட்டியை தொகுத்து வழங்குவார்கள் என்று எதிரபார்க்கப்பட்டது. 

இந்நிலையில் சென்னை சிங்கம்ஸ் டீமிற்காக சிவா களமிறங்கி விட்டார். இதனால் இப்போட்டியை தொகுத்து வழங்கப் போவது யார்? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.