"அரசியலமைப்பு பேரவையின்  உறுப்பினர்கள் சுயமாக பதவி விலக வேண்டும்"

Published By: Vishnu

22 Feb, 2019 | 06:01 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர் அனைவரும் சுயமாக பதவி விலகிக் கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின்  தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர்கள் தெரிவிற்கு   எதிர்தரப்பினராகிய நாம் ஆரம்பத்தில் இருந்து எதிர்ப்பினையே தெரிவித்தோம்.  அரசியல்வாதிகளினை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் தெரிவு இடம்பெறும் பொழுது அங்கு சுயாதீனத்தன்மை காணப்படாது. நடைமுறையில் இத்தன்மையே அரசியலமைப்பு பேரவையில்  இடம்பெற்றது. 

பிரதமர் தனக்கும் தனது கட்சிக்கும் ஆதரவானவர்களை முக்கிய நிறுவனங்களுக்கு நியமித்தார், சபாநாயகரும் அவரது கொள்கையினையே பின்பற்றினார். இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி தனது அதிருப்தியினை வெளிப்படுத்தினார். 

அரசியலமைப்பு பேரவையினை உருவாக்கியதன் நோக்கம் நிறைவேற்றப்படவில்லை ஆகவே அப்பேரவையினால் எவ்விதமான பயனும் கிடையாது. 

தற்போது எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அப்பேரவையின் உறுப்பினராக எவ்வித கடமைகளையும் இதுவரையில் பொறுப்பேற்கவில்லை. ஆகவே அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர்கள் அனைவரும் சுயமாக பதவி விலகிக் கொள்ள வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37