உண்மையை ஒப்புக்கொண்டார் பிரித்தானிய பிரதமர் : பதவிவிலக எதிர்க்கட்சி அழுத்தம்

Published By: Priyatharshan

09 Apr, 2016 | 11:08 AM
image

பிரித்­தா­னிய பிர­தமர் டேவிட் கமெரோன் தனது காலஞ்­சென்ற தந்­தையின் வெளி­நாட்­டி­லான முத­லீட்டு நிதி­யி­லி­ருந்து வரு­மா­னங்­களைப் பெற்­ற­தாக ஒப்புக் கொண்­ட­தை­ய­டுத்து பதவி வில­கு­வ­தற்­கான கடும் அழுத்­தத்தை எதிர்­கொண்­டுள்­ள­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன.

பிரித்­தா­னிய பிர­தமர் 'ஐ.ரி.வி' தொலைக்­காட்சி சேவைக்கு வியா­ழக்­கி­ழமை இரவு அளித்த பேட்­டியின் போது, தான் 2010 ஆம் ஆண்டு பிர­த­ம­ராக பத­வி­யேற்­ப­தற்கு முன்னர் பஹ­மாஸை அடிப்­ப­டை­யாகக் கொண்ட பிள­யர்மோர் நம்­பிக்கை நிதி­யத்தில் தனது மறைந்த தந்தை அயன் கமெ­ரோ­னிற்கு உடை­மை­யாக இருந்த பங்­கு­க­ளி­லி­ருந்து வரு­மா­னத்தைப் பெற்றுக் கொண்­டுள்­ளதை ஒப்புக் கொண்­டுள்ளார்.

பனா­மாவை அடிப்­ப­டை­யாகக் கொண்ட மொஸாக் பொன்­ஸேகா நிறு­வ­னத்­தி­ட­மி­ருந்­தான 'பனாமா பேப்பர்ஸ்' இர­க­சிய ஆவணக் கசிவில் பெயர் குறிப்­பி­டப்­பட்­டுள்ள பல்­லா­யி­ரக்­க­ணக்­கா­னோரில் அயன் கமெ­ரோனும் ஒரு­வ­ராவார்.

பனாமா பேப்பர்ஸ் ஆவணக் கசி­வா­னது உல­கி­லுள்ள செல்­வந்­தர்­களும் அதி­கா­ரத்­தி­லுள்­ள­வர்­களும் வரி ஏய்ப்புச் செய்யும் முக­மாக வெளி­நாட்டு நிறு­வ­னங்­களில் தமது செல்­வத்தை மறைத்து வைத்­த­தாக தெரி­விக்­கி­றது.

எனினும் தான் பத­வி­யேற்­ப­தற்கு 4 மாதங்­க­ளுக்கு முன்னர் அந்தப் பங்­கு­களை விற்று விட்­ட­தாக டேவிட் கமெரோன் கூறினார்.

“நாங்கள் பிள­யர்மோர் முத­லீட்டு நம்­பிக்கை நிதி­யத்தில் 5,000 பங்­கு­களை உடை­மை­யாகக் கொண்­டி­ருந்தோம். அவற்றை நாம் 2010 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் விற்­று­விட்டோம். அதன் பெறு­மதி சுமார் 30,000 ஸ்ரேலிங் பவு­ணாகும்" என கமெரோன் கூறினார்.

நான் எனக்குக் கிடைத்த வரு­மா­னங்கள் தொடர்பில் வரு­மான வரியைச் செலுத்­தி­யுள்ளேன். அதில் மேல­தி­க­மாக ஒரு இலாபம் கிடைத்­தது. ஆனால் அது மூல­தன வரு­மான வரி கொடுப்­ப­னவை விடவும் குறை­வாக இருந்­ததால் நான் அதற்கு வரி செலுத்­த­வில்லை" என கமெரோன் தெரி­வித்தார்.

டேவிட் கமெரோன் வியா­ழக்­கி­ழமை இரவு வரையும் தனது தந்­தையின் பங்­கு­க­ளி­லி­ருந்து தான் வரு­மானம் எத­னையும் பெற­வில்லை என வலி­யு­றுத்தி வந்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

இந்­நி­லையில் டேவிட் கமெ­ரோனின் இந்த அதி­ரடி அறி­விப்பு குறித்து அந்­நாட்டு தொழிற் கட்சி பிரதித் தலைவர் ரொம் வாட்ஸன் கூறு­கையில் மேற்­படி பங்கு வரு­மா­னங்­களைப் பெற்று வந்­தமை தொடர்பில் டேவிட் கமெரோன் பதவி விலக வேண்டும் என அழைப்பு விடுத்­துள்ளார்.

பனாமா பேப்பர்ஸ் ஆவணக் கசிவில் பெயர் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்த ஐஸ்லாந்து பிரதமர் சிக்மன்டர் கன்லாகுஸன் ஏற்கனவே பதவி விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அந்த ஆவணங்களில் உலக நாடுகளைச் சேர்ந்த 12 தற்போதைய மற்றும் முன்னாள் தலைவர்களும் ஏனைய 143 அரசியல்வாதிகளும் பெயர் குறிப்­பி­டப்­பட்டுள்­ள­னர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாஜக கூட்டணியில் இணைந்தது பாமக…. தொகுதி...

2024-03-19 15:15:41
news-image

ஹமாஸின் 3 ஆவது உயர் தலைவர்...

2024-03-19 13:25:56
news-image

பங்களாதேஸ், பாக்கிஸ்தான், இந்தியாவில் வளிமாசடைதல் மிகவும்...

2024-03-19 14:52:25
news-image

காசாவில் அல்ஜசீரா ஊடகவியலாளரை கைதுசெய்து சித்திரவதை...

2024-03-19 10:56:07
news-image

இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு...

2024-03-18 16:08:59
news-image

காஸா போர் நிறுத்தம்: கட்டார் பிரதமர்,...

2024-03-18 15:46:22
news-image

பாகிஸ்தானின் விமானத் தாக்குதல்களால் ஆப்கானில் 8...

2024-03-18 14:05:55
news-image

காசாவின் அல்ஷிபா மருத்துவமனை மீது இஸ்ரேல்...

2024-03-18 12:07:15
news-image

காஸாவின் மிகப் பெரிய வைத்தியசாலையில் இஸ்ரேலின்...

2024-03-18 11:38:08
news-image

ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் புடின் 88...

2024-03-18 08:58:58
news-image

உலகின் கவனத்தை ஈர்த்துள்ள ஒருபாலின திருமணம்...

2024-03-17 13:02:52
news-image

இந்து சமுத்திரத்தின் ஊடாக பயணம் செய்யும்...

2024-03-17 12:40:47