ரொபட் அன்டனி

தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில் தமிழ்க் கூட்­ட­மைப்­புடன் பேசாமல் வேறு­யா­ரு­டனும் பேச்சு நடத்­தி­னாலும் அர்த்­த­மில்லை. தமிழ் மக்கள் கூட்­ட­மைப்­புக்கே அதி­கா­ரத்தை வழங்­கி­யுள்­ளனர். எனவே கூட்­ட­மைப்­புடன் பேச்சு நடத்­தாமல் இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சி யல் தீர்வு தொடர்பில் எந்த தீர்­மா­னத்­தையும் அர­சாங்கம் எடுக்­காது என்று நீதி­ய­மைச்சர் விஜே­தாச ராஜ­பக்ஷ தெரி­வித்தார்.

நீண்­ட­காலப் பிரச்­சி­னைக்கு நிரந்­தர தீர்வை காணும் நோக்­கி­லேயே புதிய அர­சி­ய­ல­மைப்பை நாங்கள் உரு­வாக்­கு­கின்றோம். எனினும் இத­னைத்தான் செய்­யப்­போ­கின்றோம் என வரை­வி­லக்­கணம் எதையும் இப்­போது கூற முடி­யாது. அது தொடர்பில் எவ்­வி­த­மான தீர்­மா­னமும் எடுக்­கப்­ப­ட­வில்லை. அவ்­வாறு தீர்­மானம் எடுத்து எத­னையும் செய்­ய­மு­டி­யாது என்றும் அவர் குறிப்­பிட்டார்.

வீரகேசரி இணையத்தளத்திற்கு  வழங்­கிய விசேட செவ்­வி­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

செவ்­வியின் முழு விபரம் வரு­மாறு 

கேள்வி: ஆட்­சி­மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­ய­பின்னர் கடந்த ஒன்­றரை வரு­டங்­களில் மக்­களின் எதிர்­பார்ப்பை நிறை­வேற்­றி­னீ ர்­களா?

பதில்: அந்தக் கேள்­வியை நீங்கள் மக்­க­ளி­டம் தான் கேட்க வேண்டும். சுயா­தீ­ன­மான எந்­த­வொரு நப­ரி­னாலும் இந்த அர­சாங்கம் அனை த்து மக்­க­ளி­னதும் எதிர்­பார்ப்­புக்­களை நிறை­வேற்ற எவ்­வாறு செயற்­ப­டு­கின்­றது என்­பதை உணர்ந்து கொள்ள முடியும். மக்­களின் உரி­மை­களை பாது­காத்து எதிர்­பார்ப்­புக்­களை நிறை­வேற்றி வரு­கின்றோம்.

கேள்வி: இந்­த­வி­ட­யத்தில் தேசிய அர­சாங்கம் திருப்தி அடையும் நிலையில் இருக்­கி­றதா ?

பதில்:அர­சாங்கம் என்ற ரீதியில் முழு­மை­யாக திருப்தி அடை­கின்றோம் என கூற முடி­யாது. அர­சாங்கம் எமக்கு கிடைத்­தாலும் தற்­போது காணப்­படும் இந்த அரச இயந்­தி­ர­மா­னது கடந்த பத்து பதி­னைந்து வரு­டங்­க­ளாக அர­சியல் மய­மாக்­கப்­பட்டு விட்­டது. இந்த கட்­ட­மைப்­பி­லி­ருக்கும் ஒரு­சில அதி­கா­ரி­களும் கடந்­த­கால அர­சி­யல்­வா­தி­க­ளினால் மாற்­றப்­பட்­டு­விட்­டனர். எனவே, புதிய அர­சாங்கம் மேற்­கொள்ளும் நல்ல திட்­டங்­களும் மழுங்­க­டிக்­கப்­ப­டு­கின்­றன.

கடந்­த­கால ஆட்­சியின் போது மேற்­கொள்­ளப்­பட்ட ஊழல்கள், திருட்­டுகள் என்­பவை தொடர்­பான குற்­றச்­சாட்­டு­களை தவிர்க்கும் நோக்கில் பல்­வேறு சதித்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. மின்­சார சபை­யில்­கூட அண்­மையில் பிரச்­சி­னை­யொன்று இருக்­கலாம். ஆனால் உண்­மை­யான பிரச்­சி­னை­யை­விட உரு­வாக்­கப்­ப­டு­கின்ற பிரச்­சி­னை­களே அதி­க­மாக காணப்­ப­டு­கின்­றன. அர­சாங்­கத்தின் பிர­ப­லத்தை குறைப்­ப­தற்கு சூட்­சு­ம­மாக செயற்­பட்டு வரு­கின்­றனர்.

அதி­கா­ரத்தை இழந்த அர­சி­யல்­வா­திகள் ஒற்­று­மையை சீர்­கு­லைக்க எமது பய­ணத்தை தடுத்து நிறுத்த பல பிரச்­சி­னை­களை உரு­வாக்கி வரு­கின்­றனர். சாவ­கச்­சே­ரியில் மீட்­கப்­பட்ட ஆயு­தங்கள் மற்றும் தற்­கொலை அங்கி தொடர்பில் எமக்கு இன்னும் உண்மை தெரி­யாது. அதனை கண்­டு­பி­டிக்க நாட்­டி­லொரு முறைமை காணப்­ப­டு­கின்­றது. புல­னாய்­வுத்­து­றைக்கு நாம் இட­ம­ளிக்­க­வேண்டும்.

ஆனால் ஒரு­சில அர­சி­யல்­வா­திகள் இதனை வைத்து பிரச்­சி­னை­களை உரு­வாக்க முயற்­சிக்­கின்­றனர். இந்த அர­சாங்கம் சிங்­கள மக்­களின் உரி­மை­களை அடக்­கு­வ­தாக விம்­பத்தை காட்­டு­வ­தற்கு முயற்­சிக்­கின்­றனர். நாட்டில் மீண்டும் இன­வா­தத்தை பரப்பி மக்­களை குழப்ப முயற்­சிக்­கின்­றனர். சிங்­கள பௌத்த மக்­களை இன­வா­தத்­திற்குள் தள்­ளி­விட்டால் மாத்­தி­ரமே தமது இருப்பை தக்­க­வைத்துக் கொள்ள முடி­யு­மென கரு­து­கின்­றனர். ஆனால் மக்கள் அதி­லி­ருந்து வெ ளியே வரு­கின்ற தினத்தில் இந்த அர­சி­யல்­வா­திகள் காணாமல் போய்­வி­டு­வார்கள்.

கேள்வி: உங்­க­ளது தேசிய அர­சாங்கம் பத­விக்கு வந்து ஒன்­றரை வரு­டங்கள் நிறை­வ­டையப் போகின்­றன. ஆனால், நிதி நெருக்­கடி, ரூபாவின் பெறு­மதி வீழ்ச்சி போன்ற விட­யங்­களை நாங்கள் காண்­கின்றோம். இதற்கு என்ன காரணம் ?

பதில்:இன்று மரத்தை நட்­டு­விட்டு நாளை காய்­களைப் பெற முடி­யுமா ? தற்­போது உண்­மையில் நெருக்­க­டிகள் இருக்­கின்­றன என்று கூற­மு­டி­யாது. கடந்த அர­சாங்கம் நாட்டின் தேவை­களை கருத்­திற்­கொள்­ளாது, தமக்­கான நன்­மையை மட்டும் கருத்­திற்­கொண்டு செயற்­பட்­டதன் கார­ண­மாக நாடு அதி­க­ளவில் கடன்­பட்­டது. மஹிந்த ராஜ­பக்ஷ நாட்டைப் பொறுப்­பேற்­ற­போது எமது நாட்டின் கடன்­தொ­கை­யா­னது 1200 பில்­லியன் ரூபா­வாகும். பத்து வரு­டங்­களின் பின்னர் இன்று 9000 பில்­லியன் ரூபா­வாக உயர்­வ­டைந்­துள்­ளது. அந்த நிதியை யார் மீள் செலுத்­து­வது? நாங்கள் தான் அதனை செலுத்த வேண்டும். அவற்றை செலுத்திக் கொண்டு கடந்த 11 வரு­டங்­க­ளாக கொடுக்­கப்­ப­டாத பொரு­ளா­தார நிவா­ர­ணங்­களை கடந்த ஒரு­வ­ரு­டத்தில் நாங்கள் கொடுத்­தி­ருக்­கின்றோம்.

எரி­பொருள் விலை­கு­றைத்தோம், 13 அத்­தி­யா­வ­சிய பொருட்­களின் விலை­களை குறைத் தோம், அரச ஊழி­யர்­க­ளுக்கு 10 ஆயிரம் ரூபா சம்­பள உயர்­வினை வழங்­கினோம். அப்­ப­டிப்­பார்க்­கும்­போது இப்­போது நெருக்­க­டி­யிலி­ருப்­ப­தாக கூறவே முடி­யாது. அவை எல்­லா­வற்­றிற்கும் மேலாக மக்கள் சுதந்­தி­ர­மாக வாழ்­வ­தற்­கான சூழலை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கிறோம். மக்கள் அர­சாங்­கத்தை விமர்­சிக்கும் உரி­மையை வழங்­கி­யி­ருக்­கின்றோம். வௌ்ளை வேன் கடத்தல் எது­வு­மில்லை. இன­வா­தத்தை கட்­டுப்­ப­டுத்­தி­யி­ருக்­கிறோம். அக்­கா­லத்தில் பிக்­குமார் பிர­தமர் அலு­வ­ல­கத்தில் கதி­ரை­களை தூக்கி வீசிய வர­லாறும் காணப்­ப­டு­கி­றது. நாடு அரா­ஜ­க­மாக காணப்­பட்­டது. நாட்டில் சட்­டத்தின் ஆட்­சி­ப­டுத்தல் இல்­லா­விடின் எது இருந்தும் பல­னில்லை. அப்­ப­டி­பார்க்­கும்­போது இந்த அர­சாங்­கத்­துக்கு பூ வைத்து கும்­பி­ட­வேண்டும்.

கேள்வி:கருத்­தொ­ரு­மை­வாத தேசிய அர­சாங்­கத்தின் ஆயுட்­காலம் விரைவில் முடிந்­து­வி­டும்­போன்று தெரி­கின்­றதே?

பதில்: இரண்டு வரு­டங்­க­ளுக்கு தேசிய அர­சாங்­கத்தை கொண்டு செல்­லவே திட்­ட­மிட்­ டுள்ளோம். ஆனால் எதிர்­வரும் ஐந்து வரு­டங்­க­ளுக்கும் அர­சாங்­கத்தைக் கொண்டு செல்ல முடியும் என்ற நம்­பிக்கை எங்­க­ளுக்கு உள்­ளது.

கேள்வி:எனினும் சில அமைச்­சர்கள் பிர­தமர் தலை­மை­யி­லான அர­சாங்­கத்தை கடு­மை­யாக விமர்­சித்­துள்­ளனர். சுதந்­திரக் கட்­சியின் ஆத­ரவின் பெறு­ம­தியை அங்­கீ­க­ரிக்­காமல் நடந்­து­கொள்­வ­தா­கவும் தாம் அதி­ருப்­தி­யுடன் இருப்­ப­தா­க வும் சுதந்­திரக் கட்­சியின் அமைச்சர் ஒரு வர் குறிப்­பிட்­டுள்ளார். இது எதனை குறிக்கின்­றது?

பதில்:அது எத­னையும் குறிக்­க­வில்லை. எங்­க­ளுக்கு மக்­களே முக்­கி­ய­மா­ன­வர்கள். ஒரு­சில அமைச்­சர்கள் கூறும் விட­யங்கள் எங் ­க­ளுக்கு முக்­கி­ய­மல்ல. மக்கள் என்ன கூறு­கின்­றனர் என்­பதே முக்­கி­ய­மாகும். தேர்­தலின் பின்னர் தேசிய அர­சாங்கம் அமைப்போம் என்று நாங்கள் கூறினோம். அப்­போது தேசிய அர­சாங்கம் அமைக்­க­மாட்டோம் என்று நிமால் சிறி­பால டி. சில்வா கூறி­யி­ருந்தார். ஆனால் இன்று அதனை அனை­வரும் ஏற்­றுக்­கொண்­டுள்­ளனர். அதனால் ஒரு­சிலர் உணர்ச்­சி­வ­சப்­பட்டு கூறு­கின்ற விட­யங்கள் குறித்து நாங்கள் அலட்­டிக்­கொள்­ள­வேண்­டி­ய­தில்லை. மக்கள் வழங்­கிய ஆணையை நாம் கருத்­திற்­கொள்­ள­வேண்டும்.

கேள்வி:அப்­ப­டி­யாயின் இவ்­வா­றான விட­யங்கள் தேசிய அர­சாங்­கத்­துக்கு பாதிப்­பாக அமை­யாது என்று கூறு­கின்­றீர்­களா?

பதில்: இவை மிகவும் சிறி­ய­ள­வி­லான விட­யங்கள்.

கேள்வி: முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான அணி­யினர் புதிய கட்சி ஒன்றை ஆரம்­பித்து அர­சாங்கத்­துக்கு சவால் விடுக்­கப்­போ­வ­தாக கூறு­கின்­றனர். இது அர­சாங்­கத்­துக்கு சவா­லாக அமை­யுமா?

பதில்: அர­சியல் ரீதி­யாக நாங்கள் ஜன­நா­ய­கத்தை மதிப்­ப­வர்கள். ஜன­நா­யகம் நீடிக்­கப்­ப­ட­ வேண்­டு­மாயின் கட்­சிகள் இருக்­க­வேண்டும். புதிய கட்சி வந்தால் நாங்கள் வாழ்த்து தெரி­விப்போம். புதிய அர­சியல் கட்சி வந்தால் அது எமக்கு சாத­க­மாக அமையும். ஆனால் அதில் தங்­

கி­யி­ருந்து அர­சியல் செய்ய நாங்கள் தயா­ராக இல்லை. அடுத்­த­தாக எமது அர­சாங்­கத்தை அமைப்­ப­தற்­கான திட் டம் எம்­மிடம் உள்­ளது.

கேள்வி:புதிய கட்­சியை உரு­வாக்கும் பணியில் ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் டீல் போட்­டுக்­கொண்­டுள்ள சிலர் செயற்­பட்­டு­வ­ரு­வ­தாக கூறப்­ப­டு­கின்­றதே?

பதில்: அது அர­சியல் வங்­கு­ரோத்து கார­ண­மாக கூறும் விட­ய­மாகும். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இன்னும் நிறை­வேற்று அதி­காரம் உள்ள ஜனா­தி­பதி ஆவார். அவர் சுதந்­திரக் கட்­சியின் தலைவர். பிர­தமர் ஐக்­கிய தேசிய கட்­சியின் தலைவர். அனை­வரும் ஒற்­று­மை­யுடன் செயற்­பட்­டு­வ­ரு­கின்றோம். 19 ஆவது திருத்தச் சட்டம் வந்­ததும் அனை­வரும் வாக்­க­ளித்­தனர். மக்­களின் ஆணையை மதிப்­பது அவ­சி­ய­மாகும்.

கேள்வி:புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் முயற்­சிகள் இடம்­பெ­று­கின்­றன. இத­னூ­டாக தமிழ் பேசும் மக்­க­ளுக்கு ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய தீர்வு கிடைக்­கு­மென்­பதை எவ்­வாறு உறு­திப்­ப­டுத்த முடியும்?

பதில்:நீண்­ட­காலப் பிரச்­சி­னைக்கு நிரந்­தரதீர்வை காணும் நோக்­கி­லேயே புதிய அர­சி­ய­ல­மைப்பை நாங்கள் உரு­வாக்­கு­கின்றோம். எனினும் இத­னைத்தான் செய்­யப்­போ­கின் றோம் என வரை­வி­லக்­கணம் எதையும் இப்­போது கூற முடி­யாது. அது தொடர்பில் எவ்­வி­த­மான தீர்­மா­னமும் எடுக்­கப்­ப­ட­வில்லை. அவ்

வாறு தீர்­மானம் எடுத்து எத­னையும் செய்­ய­மு­டி­யாது. அவ்­வா­றுதான் 1972 ஆம் ஆண் டின் அர­சி­யல­மைப்பை செய்­தனர். 1978 ஆம் ஆண்டும் அவ்­வா­றுதான் செய்­தனர். அத­னால்தான் அவை எதிர்­பார்ப்­புக்­களை நிறை­வேற்­றாமல் போயின. ஆனால் நாங்கள் மக்­களின் கருத்­துக்­களை பெற்று இதனை முன்­னெ­டுக்க முயற்­சிக்­கின்றோம். அனை­வரும் இணக்­கத்­துக்கு வரும் ஒரு தீர்­மா­னத்­திற்கு நாங்கள் செல்வோம்.

கேள்வி:இந்த விட­யத்தில் தமிழ்த் தேசி யக் கூட்­ட­மைப்­புடன் நேர­டி­யாக இரு­த­ரப்பு பேச்­சுக்­களில் ஈடு­ப­டு­வீர்­களா ?

பதில்:தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் நிச்­ச­ய­மாக நேரடிப் பேச்­சு­வார்த்­தை­களை அர­சாங்கம் நடத்தும். தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புதான் தமிழ் மக்­களின் பிர­தான கட்­சி­யாகும். தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில் தமிழ்க் கூட்­ட­மைப்­புடன் பேசாமல் வேறு­யா­ரு­டனும் பேச்சு நடத்­தி­னாலும் அர்த்­த­மில்லை. தமிழ் மக்கள் கூட்­ட­மைப்­புக்கே அதி­கா­ரத்தை வழங்­கி­யுள்­ளனர். எனவே கூட்­ட­மைப்­புடன் பேச்சு நடத்­தாமல் தீர்வு தொடர்பில் எந்த தீர்­மா­னத்­தையும் அர­சாங்கம் எடுக்­காது.

கேள்வி:பொலிஸ் மற்றும் காணி அதி­கா­ரங்­களை மாகாண சபை­க­ளுக்கு வழங்கு­வது தொடர்பில் நீதி­ய­மைச்­ச­ரான உங்­களின் நிலைப்­பாடு என்ன ?

பதில்:புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக் கும் பணி­களை அர­சாங்கம் முன்­னெ­டுத்து வரு­கின்­றது. இந்த சந்­தர்ப்­பத்தில் காணி மற்றும் பொலிஸ் அதி­கா­ரங்கள் தொடர்பில் எனது தனிப்­பட்ட கருத்­துக்­களை கூறு­வது பொருத்­த­மாக அமை­யாது. நாம் திறந்த முறை­யிலும் பரந்து பட்ட வகை­யிலும் செயற்­பட்டு வரு­கிறோம். இப்­போது நான் எனது தனிப்­பட்ட கருத்தை கூற முற்­பட்டால் அது எதிர்­கால செயற்­பா­டு­களை பாதிப்­ப­தாக அமைந்­து­விடும். எனது கருத்தை மறந்து பொது­வான இணக்­கப்­பாட்­டிற்கு வரு­வது மிகவும் முக்­கி­ய­மாகும்.

கேள்வி:அப்­ப­டி­யாயின் உங்­களின் உண்மை­யான கருத்து அந்த இடத்தில் பிர­தி­நி­தித்­துவம் செய்­யப்­ப­ட­வில்லை ஏன் ?

பதில்:பிர­தி­நி­தித்­துவம் செய்­யப்­படும். எங் கள் மட்­டத்தில் நாங்கள் கலந்து கொள்­கின்ற பல்­வேறு கலந்­து­ரை­யா­டல்கள் இடம்­பெறும். அதில் எமது கருத்­துக்கள் இடம்­பெறும். ஜன­நா­ய­கத்தில் எனது தனிப்­பட்ட கருத்தை முன்­னெ­டுத்து செல்­வது முக்­கி­ய­மல்ல. பொது­வான இணக்­கப்­பாட்­டிற்கு வரு­வது முக்­கி­ய­மாகும். நான் ஒரு நிலைப்­பாட்­டினை வகிக்­கலாம். சம்­பந்தன் ஒரு நிலைப்­பாட்­டினை வகிக்­கலாம் வேறு­பா­டுகள் இருக்­கலாம். ஆனால் இங்கு பொது­வான இணக்­கப்­பாடு என்­பது மிகவும் அவ­சி­ய­மா­ன­தாகும்.

கேள்வி:அர­சாங்கம் முன்­னெ­டுக்­க­வுள்­ள­தாக கூறப்­படும் உள்­ளக விசா­ரணைப் பொறி­மு­றையில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி கிடைக்­கு­மென அர­சாங்கம் எவ்­வாறு உறு­தி­செய்யும் ?

பதில்:நாங்கள் ஜெனி­வாவில் இணைந்த பொறி­மு­றை­யொன்றை மேற்­கொள்ள இணக்­

கப்­பாட்­டிற்கு வந்தோம். நானும் அந்த அமர் வில் கலந்துகொண்­டி­ருந்தேன். அத­னூ­டாக நாங்கள் உள்­ளக பொறி­மு­றையை முன்­னெ­டுக்க முடியும். அதனை செயற்­பாட்டில் நிரூபித்துக் காட்ட வேண்­டி­யது எமது பொறுப்­பாகும்.

கேள்வி: உள்­ளக பொறி­மு­றையில் மக்கள் எவ்­வாறு நம்­பிக்கை வைக்க முடி யும்?

பதில்: இறந்­த­வ­ருக்கு மீண்டும் உயிர்­கொ­டுக்க முடி­யாது. அங்கு கவ­லை­யான சம்­பவம் நடை­பெற்று விட்­டது. நாங்கள் நான்கு முறையின் கீழ் உள்­ளகப் பொறி­மு­றையை முன்­னெ­டுப்போம். உண்­மையை கண்­ட­றிதல், நீதியை நிலை­நாட்­டுதல், நட்­ட­ஈடு வழங்­குதல், மீண்­டு­மொரு யுத்தம் இடம்­பெ­றாமல் இருக்க நட­வ­டிக்கை எடுத்தல் ஆகிய நான்கு விட­யங்­களின் அடிப்­ப­டையில் உள்­ளகப் பொறி­முறை முன்­னெ­டுக்­கப்­படும். இதில் நான்­கா­வது விடயம் முக்­கி­ய­மா­ன­தாகும். அத­னால்தான் புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கி வரு­கிறோம். இதுதான் உலகில் காணப்­படும் மிகச்­சி­றந்த முறை­யாகும். அதனை நாங்கள் முன்­னெ­டுப்போம்.

கேள்வி:முன்னாள் அர­சாங்கம் புலி­க­ளுக்கு பணம் கொடுத்­த­தாக அமைச்சர் சரத்­பொன்­சேகா தெரி­வித்­தி­ருக்­கிறார். இந்த அறி­விப்பு தொடர்பில் அர­சாங்கம் என்ன செய்­ய­வுள்­ளது ?

பதில்:எனக்கு தெரிந்­த­வ­கையில் இந்த விடயம் தொடர்பில் புல­னாய்வுப் பிரிவு விசா­ரணை நடத்தி வரு­கின்­றது. இதற்­காக சில தரப்­பினர் தம்மை கைது செய்ய வேண்டாம் எனக் கூறி நீதி­மன்ற தடை உத்­த­ர­வினை பெற்­றுள்­ளனர். பொலிஸார் அது தொடர்பில் விசா­ர­ணை­களை நடத்­து­வார்கள். இது நிரு­பிக்­கப்­பட்டால் புலி­களை யார் போஷித்­தனர் என்­பது மக்­க­ளுக்கு தெரி­ய­வரும்.

கேள்வி:நல்­லி­ணக்க செயற்­பா­டு­களில் புலம்­பெயர் மக்­களின் பங்­க­ளிப்பு எவ்­வாறு அமையும் ?

பதில்:நல்­லி­ணக்க விட­யத்தில் புலம்­பெயர் மக்­களின் ஆத­ரவை எதிர்­பார்க்­கிறோம். புலம்­பெயர் மக்கள் தொடர்­பான தடை­களை நாங்கள் நீக்­கி­யி­ருக்­கிறோம். புலம்­பெயர் மக்கள் வடக்கு மக்­க­ளுக்கு அதிக உத­வி­களை வழங்க முடியும். இலங்கை வந்து பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுடன் இணைந்து நாட்டை கட்­டி­யெ­ழுப்­பு­மாறு நாம் கூறு­கிறோம்.

கேள்வி: யாழ்ப்­பா­ணத்­திற்கு நீங்கள் எத்­தனை முறை சென்­றீர்கள் ? அங்­குள்ளமக்கள் உங்­க­ளிடம் என்ன கூறி­னார்கள்?

பதில்:யுத்தம் முடி­வ­டைந்த பின்னர் எட்டுத் தட­வைகள் நான் யாழ்ப்­பா­ணத்­திற்கு சென்­று­வந்தேன். கிரா­ம­புற மக்­களை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருக்­கின்றேன். நீதி­ய­மைச்சு சம்­பந்­தப்­பட்ட செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­கவும் நான் யாழ்ப்­பாணம் சென்­றி­ருந்தேன். எதிர்­வரும் மே மாதம் 27 ஆம் திகதி யாழில் தொழி­லாளர் மத்­தி­யஸ்தர் சபை­யினை நிறு­வு­வ­தற்கு யாழ்ப்­பாணம் செல்­ல­வி­ருக்­கின்றேன். வடக்­குடன் நாங்கள் இணைந்து செயற்­பட்டுக் கொண்­டுதான் இருக்­கின்றோம்.

யாழ்ப்­பாண மக்­க­ளுக்கு காணப்­ப­டு­கின்ற பிரச்­சி­னைகள் தொடர்பில் எங்­க­ளுக்கு தெரியும். அதில் நாங்கள் புரிந்­து­ணர்­வு­டனும் உணர்வு பூர்­வ­மா­கவும் இருக்­கின்றோம். இந்த மக்­க­ளுக்கு உயர்ந்த மட்ட சேவை­யினை வழங்க நாங்கள் எம்மை அர்ப்­ப­ணித்­தி­ருக்­கின்றோம். நீதி­மன்றத் துறையை முன்­னேற்­று­வ­திலும் ஏனைய ஏழு மாகா­ணங்­களை விட வடக்கு கிழக்கு மாகா­ணங்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்க வேண்டும். நான் ஆட்­சி­மாற்­றத்தின் பின்னர் மூன்று தட­வைகள் யாழ்ப்­பாணம் சென்றேன். அப்­போது தமக்கு பிரச்­சி­னைகள் இருப்­ப­தா­கவும் கவ­லைகள் இருப்­ப­தா­கவும் ஆனால் தாம் இன்று இலங்­கை­யர்கள் என்ற பெரு­மை­யுடன் வாழும் சுதந்­திரம் இருப்­ப­தாக மக்கள் கூறினர். இதுவே முக்­கி­ய­மாகும்.

கேள்வி:தமிழ் அர­சியல் கைதிகள் விவ­காரம் தற்­போது எந்த மட்­டத்தில் உள்­ளது ?

பதில்:நான் கைதி­களை சிறைச்­சா­லைக்கு சென்று பார்­வை­யிட்டு வந்தேன். தற்­போது அந்தப் பிரச்­சினை முடி­வுக்கு வந்து கொண்­டி­ருப்­ப­தா­கவே நான் கரு­து­கிறேன். பிணை வழங்­கக்­கூ­டிய அனை­வ­ருக்கும் பிணை வழங்­கப்­பட்டு விட்­டது. பார­தூ­ர­மான குற்­றச்­சாட்­டுகள் உள்ள சில வழக்­குகள் உள்­ளன. அதற்­காக நாங்கள் விசேட நீதி­மன்­றத்தை அமைத்து விசா­ரித்து வரு­கின்றோம். கடந்த இரண்டு மாதங்­களில் அதி­க­மான வழக்குகள் முடிக்­கப்­பட்­டுள்­ளன. இந்த வருடம் முடியும் முன்னர் அனைத்து வழக்­கு­க­ளையும் முடி­வுக்கு கொண்­டு­வர முடி­யு­மென நம்­பு­கிறோம்.

கேள்வி:நீங்­கள்தான் நீண்­ட­கா­லத்­திற்கு முன்­ன­ரையே 2007 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கத்தை விட்டு ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டீர்கள். அந்த முடிவு குறித்து விளக்க முடியுமா ? அது கடினமான முடிவா ?

பதில்:மஹிந்த ராஜபக் ஷ என்ற தனிநபருடன் எனக்கு எந்தவிதமான தனிப்பட்ட பிரச்சினை களும் இல்லை. நாங்கள் இருவரும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். நான் அவரின் சட்ட ஆலோசகராக நீண்டகாலம் செயற்பட்டிருக் கிறேன். எனினும் மஹிந்த ராஜபக் ஷ ஜனாதிப தியாகி ஐந்து மாதங்களில் அந்த ஆட்சி மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றாது என்பதனை புரிந்துகொண்டேன். தேசியஒற்றுமை எஞ்சிவிடாது என்று புரிந்து கொண்டேன். யுத்தத்தை வெல்ல முடியும். ஆனால் சமாதானத்தை வெற்றிபெற முடியாது என்பதை புரிந்து கொண்டேன். ஜனநாயகமும் நிலைநாட்டப்படாது என்பதை புரிந்தேன்.

கேள்வி: அது எப்படி உங்களுக்கு தெரிந்தது ?

பதில்: எனக்கு அது தெரிந்தது. ஆனால் அந்த ஆட்சி பாரிய சர்வாதிகார பிரச்சினையுடன்தான் முடியும் என்று எனக்குத்தெரியும். 1978 ஆம் ஆண்டு அரசியலமைப் பினை வரைந்த ஜெயராம் வில்சன் (செல்வநாயகத்தின் மருமகன்) புத்தகம் ஒன்றின் மூலம்விளக்கமொன்றை அக்காலத்தில் வழங்கியிருந்தார். அவர்தான் 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பினை வரைந்து ஜே.ஆர். ஜெயவர்தனவுக்கு கொடுத்தவர். அரசியலமைப்பினை வரைந்து இரண்டு வருடங் களின் பின்னர் அவர் புத்தகத்தை வெளியிட்டார். ஜே. ஆர். ஜயவர்த்தனவுக்கு தேவை யான வகையில் இந்த அரசியலமைப்பு உருவாக்கப்பட்டாலும், இதனூடாக நாடு நல்லதை நோக்கியா கெட்டதை நோக்கியா பயணிக்குமென்பதை அரசியலமைப்பு தீர்மானிக்காது என்றும் ஜனாதிபதியாக பதவிவகிப்பவரே அதனை தீர்மானிப்பார் என்றும் கூறியிருந்தார். சர்வாதிகாரத்திலேயே இதற்கு முடிவுவரும் என்றும் ஜெயராம் வில்சன் கூறியிருந்தார். சமூக அரசியல் சக்தியினாலேயே இதனை முடிவுக்கு கொண்டுவர முடியும் என்றும் அவர் கூறியிருந்தார். இறுதியில் அதுதான் நடந்தது.