இந்திய பிரதமர்-தென்கொரியா ஜனாதிபதி சந்திப்பு

Published By: R. Kalaichelvan

22 Feb, 2019 | 11:48 AM
image

கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான தென்கொரியாவும், இந்தியாவும் நீண்ட காலமாக நட்பு நாடுகளாக விளங்கி வருகின்றன.இந்நிலையில் அந்நாட்டு ஜனாதிபதி இந்திய பிரதமருக்கு விசேட அழைப்பொன்றை விடுத்துள்ளார்.

அழைப்பை ஏற்ற இந்திய பிரதமர் மோடி தென்கொரியா விஜயம் மேற்கொண்டார்.

தனது சுற்றுப்பயணத்தின் 2 வது நாளான இன்றும் பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். குறிப்பாக கொரிய போரில்  உயிர்நீத்த வீரர்களின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 

முன்னதாக, சியோலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, “தென்கொரியாவுடன் வளர்ந்து வரும் உறவில் பாதுகாப்புத்துறைதான் முக்கிய பங்கு வகிக்கிறது. கே-9 வஜ்ரா பீரங்கி துப்பாக்கி இந்திய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளதே இதற்கு சான்றாகும். புல்வாமா தாக்குதலுக்கு இரங்கல் தெரிவித்ததற்கும் பயங்கரவாதத்திற்கு எதிராக ஆதரவு கொடுத்ததற்கும் முன் ஜே இன்னுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 

இரு நாடுகளுக்கு இடையே போடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம், தீவிரவாதத்திற்கு எதிரான நமது கொள்கைகளை மேலும் முன்னெடுத்துச்செல்லும்” என்றார்.  

இதைத்தொடர்ந்து, தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே னும் பிரதமர் மோடியும் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது, பாதுகாப்பு, வர்த்தகம்,  முதலீடு உள்பட பல முக்கிய விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தியை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52