பிரஸல்ஸ் விமானநிலைய குண்டுத் தாக்­குதல்:  சந்­தே­க­நபர் தோன்றும் புதிய காணொளிக் காட்சி

Published By: MD.Lucias

09 Apr, 2016 | 10:33 AM
image

பெல்­ஜிய பிரஸல்ஸ் நகரில் அண்­மையில் நடத்­தப்­பட்ட தாக்­கு­த­லுடன் தொடர்­பு­பட்ட உயிர் தப்­பி­யுள்ள சந்­தே­க­நபர் தோன்றும் புதிய காணொளிக் காட்­சி­யொன்றை அந்­நாட்டு விசா­ர­ணை­யா­ளர்கள் வெளி­யிட்­டுள்­ளனர்.

குறிப்­பிட்ட அந்த நபரைக் கண்டால் அவர் தொடர்பில் தகவல் தரு­மாறு விசா­ர­ணை­யா­ளர்கள் பொது­மக்­க­ளைக் கோரி­யுள்­ளனர்.

அந்த நபர் சி.சி.ரி.வி. காணொ­­ளிக் காட்­சியில் மெல்­லிய வர்ண மேலா­டையும் தொப்­பியும் அணிந்து வீதி­யொன்றில் செல்­கிறார்.

கடந்த மார்ச் மாதம் 22 ஆம் திகதி பிரஸல்ஸ் நக­ரி­லுள்ள விமான நிலையம் மற்றும் புகை­யி­ரத நிலையம் என்­ப­வற்றில் நடத்­தப்­பட்ட தீவி­ர­வாதத் தாக்­கு­தலில் 32 பேர் பலி­யா­கி­யுள்­ளனர்.

இந்தத் தாக்­கு­தல்­களில் விமான நிலை­யத்தை இலக்கு வைத்து நடத்­தப்­பட்ட தாக்­கு­த­லுடன் தொடர்­பு­பட்ட 3 குண்­டு­தா­ரிகள் குண்டு வெடிப்பில் உயி­ரி­ழந்த அதே­ச­மயம் பிறி­தொ­ருவர் புகை­யி­ரத நிலையத் தாக்­கு­தலில் உயி­ரி­ழந்தார்.

பிரஸல்ஸ் நக­ரி­லுள்ள விமான நிலை­யத்தில் சந்­தே­கத்­துக்­கி­ட­மான முறையில் இரு தற்­கொலைக் குண்­டு­தா­ரி­க­ளுக்கு அருகில் தள்ளு வண்­டி­யொன்றில் பயணப் பொதி­களை வைத்து தள்ளிச் சென்ற தொப்­பி­ய­ணிந்தவரே அந்த சந்­தே­க­நபர் என பிராந்­திய அதி­கா­ரிகள் தெரி­விக்­கின்­றனர்.

இந்­நி­லையில் தற்­போது வெளி­யா­கி­யுள்ள பிந்­திய காணொளிக் காட்சி குறிப்­பிட்ட சந்­தே­க­நபர் விமான நிலையத் தாக்­கு­த­லை­ய­டுத்து தப்­பிச்­செல்­வதை வெளிப்­ப­டுத்­து­கி­றது.

அவர் இறு­தி­யாக மேல்பீக் புகை­யி­ரத நிலை­யத்தில் நடத்­தப்­பட்ட தாக்­கு­த­லுக்கு சுமார் 40 நிமி­டங்­க­ளுக்குப் பின்னர் அவதானிக்கப்பட்டுள்ளார்.

அவர் இந்த பிந்திய காணொளிக் காட்சியில் விமான நிலையத்தை விட்டு வெளியேறி வாடகைக் கார் தரிப்பிடமொன்றைக் கடந்து செல்கிறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52