மக்கள் நலன்சார் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் ;அசம்பிக்கவிடம் ஈ.பி.டி.பி வலியுறுத்து

Published By: Digital Desk 4

21 Feb, 2019 | 09:40 PM
image

மக்களின் நலன்களை முன்னிறுத்தியதான எமது அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை தருவதுடன் எமது பிரதேச மக்களது வாழ்வியல் மற்றும் கட்டுமாணத் தேவைகளை துரிதகதியில் மேற்கொள்ளவதற்கான எமது முயற்சிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் 

என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கிய பிரதிநிதிகளின் குழு பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உடனான சந்திப்பின்போது வலியுறுத்தியிருந்தது.

யாழ்ப்பானத்தில் உள்ள ஜெற்விங் விருந்தினர் விடுதியில் இன்றையதினம் நடைபெற்ற அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் இடையேயான சந்திப்பின்போதே அவர்கள் இவ்வாறு வலியுறுத்தியிருந்தனர்.

மேலும் தற்போது வடக்கில் பல அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படுவதாக கூறப்பட்டாலும் அவ்வாறான செயற்பாடுகள் குறைவாகவே உள்ளன. இதனால் யுத்தத்தை எதிர்கொண்ட எமது மக்கள் தொடர்ந்தும் தமது தேவைகளை பெற்று வாழ்வியல் நிலையில் முன்னேற்றம் காணமுடியாத நிலையிலேயே காணப்படுகின்றனர் என்பதுடன் பிரதேசங்களும் அபிவிருத்தியை எட்டமுடியாது காணப்படுகின்றன.

அதுமாத்திரமன்று கடந்த காலங்களில் கிடைக்கப்பெற்ற வாய்ப்புக்களை எமது மக்களின் நலன்சார்ந்த விடயங்களிலும் ஏனைய உட்கட்டுமான அபிவிருத்திகளிலும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வகிபாகம் மற்றும் அர்ப்பணிப்பான சேவைகள் தொடர்பாகவும் எடுத்து விளக்கியதுடன் அரசியல் மாற்றத்தினால் ஏற்பட்டுள்ள தொய்வின் காரணமாக தொடர்ச்சியாக மக்கள் நலன்சார்ந்த பணிகளை முன்னெடுப்பதில் உள்ள தாமதங்கள் தொடர்பாகவும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

குறிப்பாக எதிர்வரும் காலங்களில் இயற்கை அனர்த்தங்களின் போது மக்களுக்கு அசௌகரியங்களோ அன்று பாதிப்புக்களோ ஏற்படாத வண்ணம் கழிவுநீர் வாய்க்கால் புனரமைத்தல், புதிதாக அமைத்தல் உள்ளிட்ட வேலைத்திட்டங்களுடன் ஏனைய உட்கட்டுமாணங்களின் அவசியம் தொடர்பிலும் வேலைத்திட்டங்கள் ஏக்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டியதன் தேவைப்பாட்டையும் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிடம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதி குழுவினர் வலியுறுத்தியிருந்தனர்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கோரிக்கையை செவிமடுத்த அமைச்சர் விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என இதன்போது உறுதிமொழி வழங்கியிருந்தார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுடனான சந்திப்பின் போது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், கட்சியின் ஊடகச் செயலாளர் தோழர் ஸ்டாலின், கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன், கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59