பலப்படுத்தப்படுகிறது பாராளுமன்றத்தின் பாதுகாப்பு

Published By: R. Kalaichelvan

21 Feb, 2019 | 03:43 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் எதிர்வரும் மார்ச் மாதம் 5 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளதால் பாராளுமன்றத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்படுவதுடன் தீவிர சோதனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுமென சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்தார்.

.

பாராளுமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜெயசூரிய  தலைமையில் கூடியது. இதனையடுத்து சபாநாயகர் அறிவிப்பை விடுக்கும்போதே இதனைக்கூறிய சபாநாயகர் கரு ஜெயசூரிய மேலும் தெரிவிக்கையில்,

2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் எதிர்வரும் 5 ஆம் திகதி நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதால் பாராளுமன்றத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள்  பலப்படுத்தப்படுவதுடன் தீவிர சோதனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன. 

இதற்கமைய மார்ச் மாதம் முதலாம் திகதி பாராளுமன்ற கட்டிடத்தொகுதி தீவிர சோதனைக்குட்படுத்தப்படும்.இதன்போது அமைச்சர்கள் ,எம்.பி.க்களின் அறைகள், அலுமாரிகள் சோதனைக்குட்படுத்தப்படவுள்ளதால் இதற்குரிய ஒத்துழைப்புக்களை அவர்கள் வழங்க வேண்டும்.

அதேவேளை,வரவு,செலவுத்திடட்டும் சமர்ப்பிக்கப்படும் மார்ச் 5 ஆம் திகதி பாராளுமன்றத்துக்கு பொதுமக்கள் வருகை தர அனுமதி வழங்கப்படாது. 

பாராளுமன்ற பார்வையாளர் கலரி அன்றைய தினம் விசேட அழைப்பாளர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கும். அத்துடன் அன்று எம்.பி.க்களுடன் வரும் விருந்தினர்கள் பாராளுமன்ற சுற்றுவட்டப்பகுதியான ஜெயந்திபுரவிலிருந்து தனி வாகனத்திலேயே அழைத்து வரப்படுவார்கள்.எம்.பிக்களின் வாகனங்களுக்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44