விக்னேஸ்வரன் உள்ளிட்ட  3 பேர் மீதான குற்றச்சாட்டு மனு விசாரணை ஒத்திவைப்பு

Published By: Digital Desk 4

21 Feb, 2019 | 03:50 PM
image

வட மாகாண முன்னாள் முதலமைச்சர்  நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் உள்ளிட்ட மூவர் மீதான நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு மனு தொடர்பானணைக்காக வரும் மே 21ஆம் திகதிவரை மேன்முறையீட்டு நீதிமன்றம்.ஒத்திவைத்துள்ளது.

பா. டெனிஸ்வரனை மாகாண அமைச்சுப்பதவியிலிருந்து நீக்குவது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்தும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட கட்டளையை நடைமுறைப்படுத்தாது முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், அமைச்சர்கள் சிவநேசன், அனந்தி சசிதரன் ஆகிய மூவரும் நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றஞ்சுமத்தப்பட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய கட்டளைக்கு அமைய, தம்மை மீண்டும் அமைச்சுப் பதவிக்கு நியமிக்காமல் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் செயற்பட்டுள்ளமையினால் அவர் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக பா. டெனிஸ்வரன் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

டெனீஸ்வரனின் மனுவுக்கு ஆட்சேபனை தெரிவித்து விக்னேஸ்வரன் உள்ளிட்ட மூவரால் ஆட்சேபனை மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த ஆட்சேபனை மனுவை கடந்த வாரம் மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் விக்னேஸ்வரன் உள்ளிட்ட மூவரும் நீதிமன்றை அவமதித்தனர் என்ற குற்றச்சாட்டு மனு மீதான விசாரணை  மேன்முறையீட்டு மன்றால் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

எனினும் மனு மீதான விசாரணையை எதிர்வரும் மே 21 மற்றும் மே 31ஆம் திகதிகளில் முன்னெடுக்க மேன்முறையீட்டு நீதிமன்றம். உத்தரவிட்டது 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59