துறை­முக நகரை நாணய,பொரு­ளா­தார வல­ய­மாக்குவது மகிழ்ச்சி அளிக்கும் விடயம் : சீன ஜனாதிபதி

Published By: Priyatharshan

09 Apr, 2016 | 09:09 AM
image

சீன அர­சாங்கம் இலங்­கைக்கு உத­வி கள் புரியும்போது அர­சியல் கட்­சி­க­ளையோ அல்­லது தனி­ந­பர்கள் தொடர்­பிலோ அவ­தானம் செலுத்­து­வ­தில்லை. மாறாக இலங்கை வாழ் மக்­க­ளையும் நாட் டின் கொள்­கையை மாத்­தி­ரமே கருத்திற்­கொண்டு செயற்­படும். அத்­துடன் இரு நாடுகளுக்­கி­டை­யி­லான உற­வினை மூன்றாம் தரப்­பி­னரால் சீர்­கு­லைக்க முடி­யாது என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

மூன்று நாள் உத்­தி­யோ­க­பூர்வ விஜ­ய­மொன்றை மேற்­கொண்டு சீன சென்­றுள்ள பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான அமைச்­சர்கள் குழு­வினர் நேற்று சீன மக்கள் பொது மண்­ட­பத்தில் சீன ஜனா­தி­பதி ஷி ஜின்பிங் கை சந்­தித்­தனர். 

இதன்­போதே சீன ஜனா­தி­பதி மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

சீன ஜனா­தி­பதி மேலும் குறிப்­பி­டு­கையில்,

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலைமையிலான அர­சாங்­கத்தின் வெளி­நாட்டு கொள்கை மிகவும் பாராட்­ட­தக்­க­தாகும். சீன அர­சாங்கம் இலங்­கைக்கு உத­விகள் புரியும் போது அர­சியல் கட்­சி­க­ளையோ அல்­லது தனி­ந­பர்கள் குறித்தோ அவ­தானம் செலுத்­து­வ­தில்லை. மாறாக இலங்கை வாழ் மக்­க­ளையும் நாட்டின் கொள்­கையை மாத்­தி­ரமே கருத்­திற்­கொண்டு செயற்­ப­டுவோம்.

2014 ஆம் ஆண்டு என்­னு­டைய இலங்­கைக்­கான விஜ­யமும் கடந்த ஆண்டின் போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சீன வருகை தந்­ததும் இரு நாட்டு உற­வு­களை மேலும் பல­ம­டைய செய்­துள்­ளன.

மேலும் இலங்­கையில் இரண்டு பிர­தான கட்­சி­களும் ஒன்­றி­ணைந்து தேசிய அர­சாங்கத்தை நிறுவியுள்ளமை அர­சியல் வர­லாற்றில் மிகவும் முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­தாகும். இதன்­மூலம் இரு நாடு­க­ளுக்­கு­மி­டையில் உற­வினை மேலும் பலப்­ப­டுத்த முடியும் என்று நான் நம்­பு­கின்றேன்.

அத்­துடன் கொழும்பு துறை­முக நகர் திட்­டத்தை இலங்கை அர­சாங்கம் மீளவும் ஆரம்­பிக்கும் தீர்­மா­னத்தை எடுத்­த­மைக்கு மகிழ்ச்சி அடை­கின்றேன். மேலும் குறித்த நகரை நாணய மற்றும் பொரு­ளா­தார வல­ய­மாக்­கி­யமை பாராட்­ட­தக்­க­தாகும்.

இதே­வேளை தொழிற்­சாலை வல­யங்களை உரு­வாக்கி புதிய தொழில்­நுட்ப யுகத்தை நோக்கி இலங்கை பிர­வே­ச­மாகும் செயற்­பாடு பல்­வேறு நன்­மை­களை கொண்டு வந்து சேர்க்கும். இதனை இலக்­காக கொண்டு இலங்­கையில் பல்­வேறு முத­லீ­டு­களை செய்து நாணய உத­வி­களை செய்­வ­தற்கு சீனா அர­சாங்கம் தயா­ரா­கவே உள்­ளது. இதன் முதற்­கட்­ட­மாக சிறு­நீ­ரக வைத்­தி­ய­சாலை ஒன்றை நிர்­மா­ணிக்­க­வுள்ளோம். இலங்­கைக்கும் சீனா­வுக்­கு­மி­டை­யி­லான நட்­பு­ற­வினை சீர்­கு­லைப்­ப­தற்கு மூன்­றா­வது தரப்­பினால் முடி­யாது என்றார்.

இதன்­போது பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கருத்து வெளியிடுகையில்,

இலங்­கையின் அபி­வி­ருத்தி நட­வ­டிக்கை தொடந்தும் உத­வி­களை வழங்­கு­வ­தனை நினைத்து நான் நன்றி கூற விரும்­பு­கின்றேன். இலங்­கையும் சீனாவும் பூகோள பொரு­ளா­தார வளர்ச்சி என்ற இலக்கை நோக்கி பய­ணிக்­கின்­றன. இதற்கான சீனாவின் ஒத்­து­ழைப்பு பாராட்­ட­தக்­கது.

கடந்த காலங்கள் தொடர்பில் விமர்­சனம் மாத்­திரம் செய்­யாமல் எதிர்­கால இலட்­சி­யத்தை அடை­வதே தேசிய அர­சாங்­கத்தின் நோக்­க­மாகும். ஆசிய பிராந்­தி­யத்தை பலப்­ப­டுத்தும் வகையில் இந்து சமுத்திரத்தி வலயத்தில் சமாதானத்தை நிலைநாட்ட வேண்டியுள்ளது. இதற்கு சீனாவின் பங்களிப்பு அளப்பரியது என்றார்.

இந்த சந்திப்பில் அமைச்சர்களான சஜித் பிரேமதாஸ இமங்கள சமரவீர இமலிக் சமரவிக்கிரம இநிமல் சிறிபால டீ சில்வாஇ ரவூப் ஹக்கீம் மற்றும் சரத் அமுனுகம ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04