பாராளுமன்றம் அமைந்துள்ள பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம் செய்வதற்கு கடுவெல மஜிஸ்திரேட் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

வேலையில்லா பட்டதாரிகள் இன்று பொல்துவ சந்தியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ளவிருந்த நிலையில் பொலிஸாரின் வேண்டுகோளுக்கு அமைய இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.