வடகொரியாவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை:ட்ரம்ப்

Published By: R. Kalaichelvan

21 Feb, 2019 | 11:23 AM
image

அணுஆயுதங்களை முழுமையாக கைவிட வடகொரியாவுக்கு அமெரிக்கா நெருக்கடி அளிக்கவில்லை என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் இடையேயான 2 ஆது சந்திப்பு வியட்நாமின் ஹனோய் நகரில் எதிர்வரும் 27 மற்றும் 28 ஆம்  திகதிகளில் நடக்க இருக்கிறது. 

இதற்கான ஏற்பாடுகள் முழுமூச்சில் நடந்து வருகின்றன. இந் நிலையில், வெள்ளை மாளிகையில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய ட்ரம்ப், அணுஆயுதங்களை முழுமையாக கைவிட வடகொரியாவுக்கு அமெரிக்கா நெருக்கடி அளிக்கவில்லை என கூறினார். 

இது குறித்து அவர் மேலும்தெரிவிக்கையில்,

வியட்நாமில் நடைபெற உள்ள கிம் ஜாங் அன் உடனான சந்திப்பை நான் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். இது தொடர்பாக தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினேன். 

வியட்நாம் சந்திப்பு குறித்து தீர்க்கமாக ஆலோசித்தோம். இந்த சந்திப்பில் பல வி‌ஷயங்கள் வெளிவரும் என நம்புகிறேன். அணுஆயுதங்களை முழுமையாக கைவிடுவதற்கு காலக்கெடு நிர்ணயித்து வடகொரியாவுக்கு நாங்கள் நெருக்கடி தரவில்லை. ஆனால் அது விரைவில் நடக்க வேண்டும் என பலரும் விரும்புகிறார்கள். அது நிச்சயம் நடக்கும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது அன அவர் தெரவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47