எடுடா வண்டிய போடுடா விசில - இம்ரான் தாகீர்

Published By: Vishnu

20 Feb, 2019 | 08:32 PM
image

12 ஆவது ஐ.பி.எல்.கிண்ணத் தொடரானது எதிர்வரும் மார்ச் மாதம் 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் வீரர் இம்ரான் தாகீர் தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார். 

ஐ.பி.எல். 2019 தொடருக்கான முதல் 2 வாரத்திற்கான போட்டி அட்டவணை நேற்று வெளியான நிலையிலேயே அவர் இந்த பதிவை டுவிட்டர் பக்கத்தில் பதிவிறக்கம் செய்துள்ளார். 

அந்தப் பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது, 

"என் இனிய தமிழ் மக்களே நலமா? மார்ச் 23 ஆம் திகதி நமது கோட்டையில் களம் இறங்குகிறோம். வந்தோம் வென்றோம் சென்றோம். வருவோம் வெல்வோம் செல்வோம். இந்த வருஷமும் காளியோட ஆட்டத்த பாப்பீங்க. கொல காண்டுல வாரோம். செண்டிமெண்ட் இருக்குறவன் குறுக்க வராதீங்க. எடுடா வண்டிய போடுடா விசில" என பதிவிட்டுள்ளார்.

இவரின் இந்த பதிவுக்கு பதில் அளிக்கும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ன் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில்,

"நலம் நலம் அறிய ஆவல். ஆசையாய் வளர்க்கும் சிங்கக்குட்டி எப்படி இருக்கிறது. தெற்கு ஆப்பரிக்காவில் நல்ல மழை பெய்கிறதா? வீட்டில் அனைவரையும் கேட்டதாக கூறவும். தம்பி நிகிடி சவுக்கியமா? வரும் போது மறவாமல் சீமை ரொட்டியும் மிட்டாயும் வாங்கி வரவும்" என்று பதிவிட்டுள்ளனர். 

ஐ.பி.எல். தொடர்களில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கடந்த ஆண்டு முதல் விளையாடி வருபவர் தென்னாப்பிரிக்க வீரர் இம்ரான் தாஹிர். இந்திய கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் போல் இவரும் அவ்வப்போது தமிழில் டுவிட் செய்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகின்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41