தெனியாய பிரதேச வைத்தியசாலை நிர்மாணப்பணிகள்  ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்படும் - சாகல ரத்னாயக்க

Published By: R. Kalaichelvan

20 Feb, 2019 | 04:53 PM
image

தெனியாய பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள 600 கட்டில்களைக் கொண்ட வைத்தியசாலை நிர்மாணப்பணிகளின் செயற்பாட்டு நடவடிக்கைகளை ஆராயும் விசேட கலந்துரையாடல் பிரதம ரணில் விக்கிரமசிங்க தலைமையில், துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்கவின் பங்குப்பற்றலுடன் இன்று அலரி மாளிகையில் நடைப்பெற்றது. 

தெனியாயவில் தற்போது காணப்படுகின்ற வைத்தியசாலை மிகவும் பழமைவாய்ந்தமையால் இனிதும, மொரவக்க ஆகிய பிரதேசங்களில் வாழ்கின்ற மக்கள் கராப்பிட்டிய மற்றும் மாத்தறை பிரதேசங்களில் அமைந்துள்ள வைத்தியச்சாலைகளுக்கு செல்ல வேண்டியுள்ளமையால் பல இன்னல்களிற்கு முகங்கொடுக்கின்றார்கள். 

தற்போது தென் மாகாணத்தின் தேசிய வைத்தியசாலை கரையோர பிரதேசத்திலே அமைந்துள்ளது.வைத்தியசாலையின் நிர்மாணப்பணிகளை விரைவாக திட்டமிட்டு இவ்வாண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் நிர்மாணப்பணிகளை ஆரம்பிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார். 

தெனியாய ஹென்பர் தோட்டதில் இப்புதிய வைத்தியசாலையை நிர்மாணிப்பதற்கு தேவையான இடங்களை ஒதுக்கிக்கொள்ளும் திட்டம் எதிர்வரும் வாரத்திற்குள் நிறைவுப்பெறுமெனவும் அமைச்சர் இதன் போது தெரிவித்தார்.

முழுமையாக அமைக்கப்பட்ட இருதய சத்திரசிகிச்சை பிரிவினை அமைப்பதன் மூலமாக தெனியாய மக்கள் நன்மையடைவார்களென அமைச்சர் ரத்னாயக்க மேலும் தெரிவித்தார்.  இத்திட்டத்தின் பொருட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தன்னுடைய முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவதாக தெரிவித்தார்.

இக்கலந்தரையாடலில் கொடபொல பிரதேச சபை செயலாளர், தேசிய ஒழுங்கமைப்பு திணைக்கள அத்தியட்சகர் மற்றும் உதவி அத்தியட்சகர், சுகாதார திணைக்களத்தின் அத்தியட்சகர், சுகாதார அமைச்சின் உதவி அத்தியட்சகர், மாத்தறை மாவட்ட சுகாதார சேவை அத்தியட்சகர் மற்றும் அமைச்சரின் தனிப்பட்ட செயலாளர் உள்ளடங்கலாக அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58