நீர் வழங்கல் திட்டங்களை இந்த வருடத்துக்குள் பூர்த்திசெய்ய நடவடிக்க- அமைச்சர் ரவூப் ஹக்கீம்

Published By: R. Kalaichelvan

20 Feb, 2019 | 03:41 PM
image

நீர் வழங்கல் திட்டங்களை முடியுமானளவு இந்த வருடத்துக்குள் பூர்த்திசெய்து அவற்றை மக்களிடம் கையளிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பதுளை மாவட்டத்தில் பல்வேறு நீர் வழங்கல் திட்டங்களை ஆரம்பித்துவைத்த பின்னர், பென் ஹெட் தோட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

அங்கு உரைநிகழ்த்திய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது,

மலையகத்திலுள்ள இந்திய வம்சாவளி மக்கள் நீண்டகால போராட்டத்தின் மூலமே தங்களது உரிமைகளை படிப்படியாக வென்று வருகின்றனர். இந்திய அரசுடன் இணைந்து பல்வேறு பேச்சுவார்த்தைகளின் பின்னரே அடிப்படை உரிமையான வாக்குரிமை வழங்கப்பட்டது.

மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி,பதுளை மாவட்டத்தில் இருவர் உட்பட தற்போது 9 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இந்த பிரதிநிதித்துவம் இன்னும் அதிகரிக்கப்படவேண்டும். உங்களுக்குப் பொறுத்தமானவர்களை தெரிவுசெய்தால்தான்,அவர்கள் அபிவிருத்திகளை மக்கள் காலடிக்கே கொண்டுவருவார்கள்.

விகிதாசார தேர்தல் முறையை கொண்டுவரும் முயற்சி இன்னும் கைவிடப்படவில்லை. 

சிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் இதன் பாரதூரங்களை அறிந்து எதிர்த்து வருகின்றன. பழைய முறையில் தேர்தல் நடத்தப்பட்டால் மட்டுமே எமது பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக்கொள்ள முடியும் என்றார்.

இந்நிகழ்வில் தொழிலாளர், தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் ரவீந்திர சமரவீர, பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார், வெலிமடை பிரதேச சபை பிரதி தவிசாளர் சீதா சமரவீர, பதுளை மாவட்ட கட்சி அமைப்பளாளர் தாஜுதீன், தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்பு சபையின் தலைவர் கே.ஏ.அன்சார், சபையின் உயரதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19