தமது ரசிகர்களுக்கு மறக்க முடியாத காதலர் தின கொண்டாடட் த்தை வழங்கிய OPPO

20 Feb, 2019 | 01:08 PM
image

OPPO ஸ்ரீலங்கா நிறுவனமானது, இம்முறை சமூக வலைத்தளத்தில் ஆச்சரியமூட்டும் வகையிலான ஊக்குவிப்பு திட்டத்துடன் காதலர் தினத்தை கொண்டாடியது. இதன் மூலமாக OPPO இன் அனுசரணையுடன் அதிர்ஷ்டசாலி ஜோடியொன்று தமக்கு விருப்பமான உணவகத்தில் இராப்போசன விருந்தொன்றை அனுபவிப்பதற்கான வாய்ப்பினை வென்றிருந்தனர்.

இதன்போது இவ் வருடத்தின் மிகச்சிறந்த காதலர் தின பரிசுப்பொருளாக ஏன் OPPO F9 உள்ளது என்ற கருத்துக்களுடன் OPPO முகநூல் பக்கத்தில் தமது காதலன், காதலியுடன் எடுத்துக்கொண்ட மறக்கமுடியாத செல்ஃபி ஒன்றினை பதிவேற்றுமாறு பார்வையாளரக் ளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. 

மேலும் தனது காதலன், காதலியை டேக் செய்து அதனை ‘பொதுமக்கள்’ பார்வையில் படும்படி பதிவேற்றி #OPPOF9 #Valentines_Dinner எனும் ஹேஸ்டேக்குடன் அப்பதிவினை லைக் செய்தல் மற்றும் பகிர்வதன் மூலம் போட்டியில் பங்கேற்கலாம் எனக்கூறப்படட் து.

‘இந்த காதலர் தினப் போட்டியில் பங்குபற்றுவதற்கு பார்வையாளர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற ஆர்வம் மற்றும் உற்சாகத்தை கண்டு நாம் உண்மையிலேயே ஆச்சரியமடைந்தோம். OPPO ஆனது எப்போதும் இந்நாட்டின் இளைஞர்களுடன் நெருங்கிய உறவை பேணி வந்துளள்து.

OPPO மீதான ஆர்வத்தை சான்று பகர்வதாக இதுவமைந்துள்ளது” என OPPO ஸ்ரீலங்காவின் பிரதம நிறைவேற்று அதிகாரி பொப் லீ தெரிவித்தார். 

தமக்கு பிடித்த உணவகத்தில் மறக்கமுடியாத இராப்போசன விருந்தொன்றை பெறுவதற்கான வாய்ப்பினை வழங்கிய இப்போட்டியில் மொறட்டுவயைச் சேர்ந்த ரங்கிகா ஹன்சனி மற்றும் தனுஷ்க பெர்னாண்டோ ஆகியோர் வெற்றியாளர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.

OPPO இன் புகழ்பெற்ற F -தொடரில் புதிய தெரிவாக இணைக்கப்பட்டுள்ள OPPO F9 கைபேசியில், வெறும் 5 நிமிடங்கள் சார்ஜ் செய்தாலும் 2 மணித்தியாலங்கள் வரையான உரையாடல் நேரத்தை வழங்கும் VOOC Flash சார்ஜிங் வசதி மற்றும் இத்துறையின் முதலாவது கிரேடியண்ட் வர்ண வடிவமைப்பு ஆகியவை உள்ளடக்கப்பட்டுள்ளன. 

OPPO F9தெரிவானது, தனிச்சிறப்பான அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், இத்துறையின் முதலாவது 6.3 அங்குல ‘Waterdrop திரை’ வடிவமைப்பு, 90.8 சதவிகித உயர் திரை முதல் உள்ளக அமைப்பு, தனிச்சிறப்பான கிரேடியன்ட் வர்ண வடிவமைப்பு மற்றும் 3500 mAh பற்றரி ஆகியவை OPPO இன் தொழில்நுட்ப மேம்பாடான மற்றும் புதுமையான செயற்திறனை பிரதிநிதித்துவம் செய்வதாக அமைந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகக் கல்வியியல்...

2024-04-18 20:23:36
news-image

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு ‘சாதனைத்...

2024-04-16 16:18:15
news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08