விகிதாசார தேர்தல் முறைக்கு அனைத்து கட்சிகளும் இணக்கம் -ரவூப் ஹகீம்

Published By: R. Kalaichelvan

20 Feb, 2019 | 12:37 PM
image

(நா.தினுஷா)

சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கு விகிதாசார தேர்தல் முறையே சிறந்த தெரிவாக அமைவதோடு விகிதாசார தேர்தல் முறைமையில் எதிர்வரும் தேர்தல்களை நடத்த அனைத்து கட்சிகளும் விருப்பம் தெரிவித்துள்ளதாக நகரத்திட்டமிடல் , நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹகீம் தெரிவித்தார்.

தேசிய ரீதியான சில முக்கிய கட்சிகள் கடந்த காலத்தில் விகிதாசார தேர்தல் முறைக்கு தமது எதிர்ப்பினை வெளியிட்டிருந்தன. அதன் விளைவாகவே கடந்த உள்ளூராட்சிமன்ற தேர்தல் புதிய முறையொன்றினம் கீழ் நடத்தப்பட்டது. 

ஆனால் அந்த புதிய முறையினால் ஏற்பட கூடிய பாதகத்தினை அனைவரும் நன்கு உணர்நதுள்ளனர்.

இருப்பினும் சிறுப்பான்மை கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் விகிதாசார பிரதிநிதித்துவத்தையே வலியுறுத்தினோம். அதற்கான அழுத்தங்களையும் வழங்கியிருந்தோம். அதன் தொடர்ச்சியாக கடந்த உள்ளளூராட்சி மன்ற தேர்தலில் இடம்பெற்ற பாதகமான விடயங்களின் காரணமாக தற்போது புதிய தேர்தல் முறைக்கு அனைத்து கட்சிகளும் அதிருப்த்தியினை வெளியிட்டுள்ளன. 

இந்நிலையில் அனைத்து கட்சிகளும் விகிதாசார முறைக்கு தனது ஒத்துழைப்பினை வழங்க முன்வந்துள்ளதுடன் அதற்கான விருப்பினையும் வெளியிட்டுள்ளனர்.

எனவே எதிரகால்ததில் இடம்பெறும் தேர்தல்கள் விகிதாசார தேர்தல் முறையின் அடிப்படையிலேயே இடம்பெற வேண்டும். சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு இந்த தேர்தல் முறையினூடாகவே தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.

ஊவா மாகாணத்துக்கான நீர்வழங்கள் வேலைத்திட்டத்தின் திறப்பு விழா நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11