உலகின் சிறந்த வீரராக ஜோகோவிச்

Published By: Vishnu

20 Feb, 2019 | 12:27 PM
image

இவ்  ஆண்டுக்கான லாரெஸ் உலக விளையாட்டு அகாடமி விருது வழங்கும் விழா மொனாக்கோவில் நேற்று முன்தினம் இடம்பெற்றது.

இதில் உலகின் நம்பர் வன் டென்னிஸ் வீரரான ஜோகோவிச் (செர்பியா) சிறந்த வீரர் விருதை தட்டிச் சென்றார். 

இந்த விருதை நான்காவது முறையாகவும் அவர் கைப்பற்றி உள்ளார். 

ஜோகோவிச் விம்பிள்டன் மற்றும் அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்றார். அத்துடன் கடந்த மாதம் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தையும் கைப்பற்றினார். இது அவரது 15 ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.

இத‍ேவேளை அமெரிக்காவை சேர்ந்த 21 வயதான ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை சிமோனே பைல்ஸ் சிறந்த வீராங்கனை விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். 

அவர் ஒலிம்பிக் போட்டியில் 4 தங்கப்பதக்கமும், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 14 தங்கப்பதக்கமும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சரிவில் இருந்து மீண்டு வந்த வீரருக்கான விருதை அமெரிக்காவை சேர்ந்த கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் பெற்றுள்ளார்.

2018-ம் ஆண்டு அமெரிக்க ஓபன் பட்டத்தையும், கடந்த மாதம் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தையும் வென்ற ஜப்பான் டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா திருப்புமுனை ஏற்படுத்திய வீராங்கனை விருதை தனதாக்கி இருக்கிறார்.

அத்துடன் உலக கோப்பையை வென்ற பிரான்ஸ் கால்பந்து அணி சிறந்த அணிக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

விளையாட்டுக்கான நல்லெண்ண விருதுக்கு ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த யுவா என்ற தன்னார்வ அமைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

ஆண்டு முழுவதும் விளையாட்டு உலகில் ஆதிக்கம் செலுத்தி சாதனை படைக்கும் வீரர்-வீராங்கனைகள் மற்றும் விளையாட்டுக்கு சிறந்த பங்களிப்பை அளித்து வருபவர்களுக்கு 2000 ஆம் ஆண்டு முதல் மொனாக்கோவை சேர்ந்த லாரெஸ் உலக விளையாட்டு அகாடமி விருது வழங்கி கெளரவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31