சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்திய இளைஞனுக்கு விளக்கமறியல்

Published By: R. Kalaichelvan

19 Feb, 2019 | 05:11 PM
image

பதின்ம வயதுச் சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உள்பட்ட இடத்தில் சிறுமி ஒருவரை இளைஞர் ஒருவர் தடுத்துவைத்திருந்தார் என்று அவரது தாயாரால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், சிறுமியை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையில் முற்படுத்தினர். அத்துடன் இளைஞனைக் கைது செய்தனர்.

13 வயது நிரம்பிய சிறுமியை சட்டபூர்வ பாதுகாவலரின் பாதுகாப்பிலிருந்து கவர்ந்து சென்று பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் இளைஞனை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினர்.

சந்தேகநபர் சார்பில் சட்டத்தரணி முன்னிலையாகி சந்தேக நபரை பிணையில் விடுவிக்கவேண்டும்" என்று சந்தேகநபரின் சட்டத்தரணி மன்றில் சமர்ப்பணம் செய்தார்.

இருதரப்பு இரு தரப்பு வாதங்களையும் ஆராய்ந்த நீதவான் , சிறுமியை இளைஞன் வன்புணர்வுக்குட்படுத்தினார் என்றே பொலிஸார் குற்றச்சாட்டுப் பதிவிட்டுள்ளனர். எனவே அவரை பொலிஸாரின் விசாரணைகள் நிறைவடையும் வரை பிணை வழங்க முடியாது.என்று கட்டளையிட்டதுடன், சந்தேகநபரை எதிர்வரும் 28ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54