தீவிரவாதிகளின் புகலிடங்கள்,அமைப்புகள் அழிக்கப்பட வேண்டும்:இந்தியா,ஆர்ஜென்டினா

Published By: R. Kalaichelvan

19 Feb, 2019 | 09:17 AM
image

உலகின் அனைத்து பகுதிகளிலும் உள்ள தீவிரவாத அமைப்புகளின் புகலிடங்கள் அழிக்கப்பட வேண்டும். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானப்படி இந்தியாவும், ஆர்ஜென்டினாவும் தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக போராட வேண்டுமென இருநாட்டு தலைவர்களளும் தெரிவித்துள்ளனர்.

காஷ்மீர் புலவாமா தாக்குதலுக்கு பின்னர் முதலாவது வெளிநாட்டு தலைவராக ஆர்ஜென்டினா  ஜனாதிபதி மவுரிசியோ மாக்ரி இந்தியா வந்துள்ளார். 

டெல்லியில் அவரும், பிரதமர் நரேந்திர மோடியும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.அப்போது காஷ்மீர் தாக்குதல் சம்பவம் பற்றியும் இருவரும் பேசினார்கள்.

பின்னர் இரு தலைவர்களும் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள்’ என்ற சிறப்பு அறிவிப்புகளை கூட்டு அறிக்கையாக வெளியிட்டனர். 

குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

தீவிரவாதம் உலக அமைதிக்கும், நிலைத்தன்மைக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. தீவிரவாதத்துக்கு எதிராக உலக நாடுகள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.குறிப்பாக எல்லைதாண்டிய தீவிரவாத நடவடிக்கையை எந்தவகையிலும், எந்த நாட்டின் மீது நடந்தாலும் அதை நியாயப்படுத்த முடியாது.

அனைத்துவகையான தீவிரவாதத்தையும், அதன் வெளிப்பாடுகளையும் ஒடுக்க வேண்டும். தீவிரவாதிகள், தீவிரவாத அமைப்புகள், அவர்களது தொடர்பு மற்றும் செயல்பாடுகள், அவர்களை ஊக்கப்படுத்துபவர்கள், ஆதரிப்பவர்கள், நிதியுதவி மற்றும் புகலிடம் வழங்குபவர்கள் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உலகின் அனைத்து பகுதிகளிலும் உள்ள தீவிரவாத அமைப்புகளின் புகலிடங்கள் அழிக்கப்பட வேண்டும். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானப்படி இந்தியாவும், ஆர்ஜென்டினாவும் தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக போராடவும், இச் சவாலை சந்திக்கவும் தங்களது நல்லுறவை பலப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47