பாகிஸ்தானுடனான உறவு தொடரும் - சவுதி இளவரசர்

18 Feb, 2019 | 08:29 PM
image

சவுதி அரேபிய இளவரசர் சல்மான், பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

புல்வாமா தற்கொலைப்படை தாக்குதலில் இந்திய துணை இராணுவ வீரர்களின் உயிரிழப்பால் இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே பிரச்சினை நிலவி வருகிறது. 

காஷ்மீரில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஆதரவு இருக்கும் என உலக நாடுகள் குற்றம் சாட்டியதோடு மட்டுமல்லாமல் இந்தியா தாக்குதல் நடத்தினால் ஆதரவு அளிப்போம் என அமெரிக்கா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் சவுதி அரேபிய இளவரசர் சல்மான், பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

அத்துடன் இந்த விஜயத்தின்போது சவுதி இளவரசர் பாகிஸ்தானுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினை தவிர்க்க அந் நாட்டுடன் 20 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான 8 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார். 

காஷ்மீர் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி என இந்தியா அறிவித்த காரணத்தால் பாகிஸ்தானின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சவுதி அரேபியாவின் இந்த ஒப்பந்தங்கள் பெருமளவு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விஜயத்தின்போது பாகிஸ்தான் அதிபர் மாளிகைக்கு சென்ற முஹம்மது பின் சல்மான், அல் சவுத் அதிபர் ஆரிப் ஆல்வி-யை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பின்னர் அதிபர் ஆரிப் ஆல்வி பாகிஸ்தான் நாட்டின் மிக உயரிய ‘நிஷான் இ பாகிஸ்தான்’ விருதினை சவுதி இளவரசருக்கு வழங்கி கெளரவித்தார். 

இதன்போது சவுதி அரேபியாவுக்கு பாகிஸ்தான் நெருக்கமான நாடு என்றும், பாகிஸ்தானுடன் உறவு தொடரும் என்றும் சவுதி இளவரசர் அறிவித்தார்.

இந் நிகழ்வின்போது பாகிஸ்தான் இம்ரான் கான் உள்ளிட்ட அமைச்சர்களும் உடன் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசாவில் அல்ஜசீரா ஊடகவியலாளரை கைதுசெய்து சித்திரவதை...

2024-03-19 10:56:07
news-image

இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு...

2024-03-18 16:08:59
news-image

காஸா போர் நிறுத்தம்: கட்டார் பிரதமர்,...

2024-03-18 15:46:22
news-image

பாகிஸ்தானின் விமானத் தாக்குதல்களால் ஆப்கானில் 8...

2024-03-18 14:05:55
news-image

காசாவின் அல்ஷிபா மருத்துவமனை மீது இஸ்ரேல்...

2024-03-18 12:07:15
news-image

காஸாவின் மிகப் பெரிய வைத்தியசாலையில் இஸ்ரேலின்...

2024-03-18 11:38:08
news-image

ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் புடின் 88...

2024-03-18 08:58:58
news-image

உலகின் கவனத்தை ஈர்த்துள்ள ஒருபாலின திருமணம்...

2024-03-17 13:02:52
news-image

இந்து சமுத்திரத்தின் ஊடாக பயணம் செய்யும்...

2024-03-17 12:40:47
news-image

கச்சத்தீவு விஷயத்தில் கருணாநிதி செய்தது துரோகம்:...

2024-03-17 11:40:06
news-image

நான் தோற்றால் இரத்தக்களறி - டிரம்ப்

2024-03-17 11:33:21
news-image

ஏழு கட்டங்களாக இந்திய மக்களவை தேர்தல்...

2024-03-16 16:18:24