பதின்ம வயது மாணவிக்கு பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பி.போல் உத்தரவிட்டார்.
யாழ்ப்பாணம் கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலையில் சித்திர பாடம் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் மாணவியை தண்டிப்பதாக அவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது.
இந்தச் சம்பவம் கடந்த 12ஆம் திகதி இடம்பெற்றது. முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் ஆசிரியரைக் கைது செய்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று முற்படுத்தினர்
ஆசிரியருக்கு எதிராக 345ஆம் பிரிவின் கீழ் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டின் கீழ் நீதிமன்றில் பொலிஸார் அறிக்கை தாக்கல் செய்தனர்.
சந்தேகநபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, பிணை விண்ணப்பம் செய்தார். எனினும் சிறுமிகளைத் துன்புறுத்துவது பாரதூரமான குற்றம் என்று சுட்டிக்காட்டிய யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல், சந்தேகநபரை எதிர்வரும் மார்ச் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM