சீனாவில் இடம்பெறவுள்ள கால்பந்தாட்ட போட்டியில் விளையாட இலங்கையின் 8 இளம் வீரர்களுக்கு வாய்ப்பு

Published By: Priyatharshan

18 Feb, 2019 | 02:59 PM
image

சீனாவில் நடைபெறவிருக்கும் மைலோ செம்பியன்ஸ் கப் கால்பந்தாட்ட போட்டியில் பங்கேற்க இலங்கையின் எட்டு இளம் கால்பந்தாட்ட வீரர்களுக்கு வாய்ப்பளிக்கவுள்ளது மைலோ.

இலங்கை பாடசாலைகளுக்கான கால்பந்து சங்கத்தின் ஏற்பாட்டில் 13,000 சிறார்களின் பங்கேற்புடன் உள்நாட்டு U-12 பாடசாலை கால்பந்து கழகங்களுக்கான போட்டி.

இலங்கையின் மிகத்திறமையான எட்டு இளம் கால்பந்தாட்ட வீரர்களின் வாழ்நாளிற்கானதோர் ஒப்பற்ற அனுபவமாக, முதன்முறையாக சீனாவில் நடைபெறும் மைலோ செம்பியன்ஸ் உலக கால்பந்து போட்டிகளில் கலந்துகொள்வதற்கானதோர் அரிய வாய்ப்பினை பெறவுள்ளனர். 

FC Barcelona உடன் மீண்டும் கைக்கோர்ப்பதன் மூலம் மகத்தானதோர் சாதனை மையிற்கல்லினை அடைய மைலோ எதிர்ப்பார்க்கின்றது.

இவ்வாறான உலகத்தரமுடைய விளையாட்டுகளில் பங்கேற்பதற்கான வாய்ப்பினை எமது குழந்தைகளுக்கும் வழங்குவதன் மூலம் அவர்களது அபிலாஷைகளை வளர்த்திடவும், சகலதுறைகளையும் நன்கறிந்ததோர் நபர்களாக ஊக்குவிப்பதே மைலோவின் நோக்கம். FC Barcelona என்றுமே உயர்வாக கருதிடும் ஐந்து பிரதான அம்சங்களான பணிவு, நோக்கம், முயற்சி, மரியாதை மற்றும் குழுப்பணி ஆகியவற்றை கருப்பொருளாக கொண்டு, மைலோ மற்றும் FC Barcelona நான்கு ஆண்டுகளுக்கானதோர் சர்வதேச அளவிலான கூட்டமைப்பாக ஆரோக்கியமானதோர் வாழ்க்கை முறை மற்றும் சிறார்களுக்கான உடலியல் பயிற்சி செயற்பாடுகளின் முக்கியத்துவம் பற்றி ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது. 

நாம் ஒன்றாக இணைந்து பல விளையாட்டு நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக வடிவமைத்து, எமது சிறார்களை பங்கேற்க ஊக்குவித்து வருவதோடு, மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையின் பாடசாலை விளையாட்டுகளை அபிருத்தியும் செய்துவந்துள்ளோம், மேலும் இவ்வாறானதோர் சர்வதேச ஒப்பந்தத்துடன் இலங்கையின் கால்பந்து விளையாட்டினை கட்டியெழுப்பி எமது இளம் நட்சத்திரங்களையும் சர்வதேச அரங்கிற்கு கொண்டுசெல்லுமோர் முயற்சியே 'மைலோ செம்பியன்ஸ் கப்". 

'மைலோ செம்பியன்ஸ் கப்" போட்டிக்காக நாடளாவிய ரீதியில் U-12 கால்பந்து போட்டிகள், கல்வி அமைச்சின் ஆதரவுடன் இங்கையின் பாடசாலை கால்பந்து சங்கத்தினால் நடாத்தப்படவிருக்கிறது. போட்டிகளில் பங்கேற்க 2008 மற்றும் 2009 ம் ஆண்டுகளில் பிறந்த சிறார்கள் உட்பட சிறுமிகளும் தகுதிப்பெறுவதோடு, 265 பெண் அணிகள் மற்றும் 822 ஆண் அணிகள் உள்ளடங்களாக 13,044 இளம் வீரவீராங்கனைகள் போட்டியில் பங்கேற்கவுள்ளமை விசேடம்சமாகும். போட்டியில் இவர்களது திறன்கள் மற்றும் மதிப்பீடுகளை அடிப்படையாக கொண்டு, தெரிவு முகாமிற்கான வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதுடன், மைலோ இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் எட்டு இளம் வீரர்களை நிபுணக்குழு தெரிவுசெய்திடும்.

சீனாவில் நடைபெறவிருக்கும் 'மைலோ செம்பியன்ஸ் கப்" போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துப்படுத்துவதற்காக தெரிவாகும் எட்டு இளம் வீரர்களும் மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், இந்தோனேசியா, தாய்லாந்து, அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், கொலம்பியா, சில்லி, ஜமைக்கா, திரினிடாட் மற்றும் டொபாகோ போன்ற நாட்டு வீரர்களுடன் போட்டியிடவேண்டும் என்பதோடு, எட்டு வீரர்களை கொண்ட ஒவ்வொரு அணியிலும் ஒரு வீராங்கனை உள்ளடங்களாக 5 போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதோடு பத்து நிமிடங்கள் போட்டி நடைபெறும். இப்போட்டிகள் 9 நாட்கள் வரை நடைபெறுவதுடன் FC Barcelona நடாத்தும் பயிற்சி முகாமும் இதில் உள்ளடங்கும் - The FC Barcelona Barca Academy (சொக்கர் ஸ்கூல்).

இந் நிகழ்ச்சித்திட்டம் முழுதும் மைலோ இளம் வீரர்களின் மத்தியில் அணியாக செயற்படுவதற்கானதோர் ஆற்றலை கட்டியெழுப்பிப்பிட முழுநோக்காக செயற்படவுள்ளதுடன், அணியாக செயற்படுவதின் முக்கியத்துவத்தை மெய்ப்பிக்க, மைலோ FC Barcelona உடன் இணைந்து #TEAMMAKESME  எனும் இப் புதியதோர் முயற்சியின் கருப்பொருளின் கீழ், உலகெங்கிலும் உள்ள குழந்தைகளை ஒரு குழுவாக செயற்பட தட்டியெழுப்பிடுமோர் ஒப்பற்ற நோக்கினையும் கொண்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58