மணல் ஏற்றிச்சென்ற வாகனம் மோதியதில் ஒருவர் பலி:ஒருவர் காயம்

Published By: R. Kalaichelvan

18 Feb, 2019 | 01:22 PM
image

மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனமொன்றும்,எதிரில் வந்த மோட்டார் சைக்கிளொன்றும் நேருக்கு நேராக மோதி விபத்துக்குள்ளாகியதில்,மோட்டார் சைக்கிளில் சென்ற ஆசிரியர் ஆலோசகர் ஸ்தலத்திலேயே பலியானதுடன்,அவரது மனைவி கடுங்காயங்களுடன் மகியங்கனை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவரின் நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. 

இவ் விபத்து மகியங்கனை – பதியத்தலாவை வீதியில் 98 வது மைல் கல்லருகே இன்று இடம்பெற்றுள்ளது.

மகியங்கனை கல்வி வலய ஆசிரியர் ஆலோசகரான 54 வயது நிரம்பியவரே விபத்தில் ஸ்தலத்தில் பலியானவராவார்.

 இவரது மனைவி கடுங்காயங்களுடன் மகியங்கனை அரசினர் மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்குற்படுத்தப்பட்டுள்ளார்.

இவ்விபத்து இடம்பெற்ற இடத்திற்கு ஸ்தல விசாரணைகளை மேற்கொள்ள சென்ற மகியங்கனை மஜிஸ்ரேட் நீதிபதி ஸ்தல விசாரணைகளை மேற்கொண்டதுடன்,விபத்துக்குள்ளான டிப்பர் வாகன சாரதியை ஐந்து இலட்ச ரூபா சரீரப் பிணையிலும்,ஐந்தாயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் செல்ல அனுமதித்தார்.

விபத்து குறித்து மகியங்கனைப் பொலிசார் தீவிர புலன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:17:53
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராகவும், அடிப்படை சம்பளமாக...

2024-04-19 14:59:41
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54