RP-SG விளையாட்டு வீரர்களை கெளரவிக்கும் நிகழ்ச்சி தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் நடைபெற்ற தீவிரவாதிகள் தாக்குதலுக்கு வருத்தம் தெரிவிக்கும் விதமாகவே "RP-SG விளையாட்டு வீரர்களை கெளரவிக்கும் நிகழ்ச்சி தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டு பின்னர் நடக்கும் என்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது" என விராட் கோலி குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது,   ''புல்வாமா தாக்குதலை கேட்டு அதிர்ச்சியடைந்தேன். உயிரிழந்த இராணுவத்தினருக்கு என ஆழ்ந்த இரங்கலையும், காயமடைந்தவர்களுக்கு விரைவில் குணமாகவும் வேண்டிக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.