காட்டு யானைகள் உட்புகுந்து பலத்த சேதம்

Published By: Digital Desk 4

17 Feb, 2019 | 06:12 PM
image

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட அஷ்ரஃப் நகர் குடியிருப்புப் பிரதேசத்தில் காட்டு யானைகள் சில இன்று(17) அதிகாலை கிராமத்திற்குள் புகுந்து பல சேதங்களை ஏற்படுத்தியுள்ளன.

இன்று அதிகாலை ஒரு மணியளவில் உட்புகுந்த குறித்த காட்டு யானைகள் மக்கள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் பிரவேசித்து பல சேதங்களை உண்டுபண்ணியுள்ளன. 

குடியிருப்புக்களின் சுற்றுமதில்கள், கால்நடைகளின் குடிசைகள் போன்றவற்றை உடைத்து நாசம் செய்துள்ளன.

இது தவிர, பயன்தரும் தென்னை மரங்கள் உள்ளிட்ட மேட்டு நிலப் பயிர்கள் மற்றும் மரம் செடி கொடிகள் பலவற்றையும் குறித்த யானைகள் சேதப்படுத்தியுள்ளன. 

இச்சேதங்களை உண்டாக்கிய காட்டு யானைகளை விரட்டும் நடவடிக்கைகளை பிரதேச மக்கள் மேற்கொண்டபோது அக்காட்டு யானைகள் மக்களை தாக்க முற்பட்டதாகவும், மயிரிழையில் தாம் உயிர் தப்பியதாகவும் பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட அஷ்ரஃப் நகர் கிராமத்தில் வசித்து வரும் மக்கள் மேட்டு நிலப் பயிர்ச் செய்கையினையும் நாளாந்தக் கூலி வேலையினையும் நம்பியே வாழ்வாதாரத்தினை நகர்த்திச் செல்கின்றனர். 

இப்பகுதியில் கடந்த 2008 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட திண்மக் கழிவு முகாமைத்துவ நிலையத்தில் தினமும் பல்வேறான பிரதேசங்களிலிருந்து கொண்டு வரப்படும் திண்மக் கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. 

இக்குப்பை மேட்டில் கழிவுணவுகளை உட்கொள்ளும் காட்டு யானைகள் இரவுப் பொழுதுகளில் மக்கள் வாழும் குடியிருப்புப் பகுதிகளுக்குள் உட்புகுந்து உப உணவுப் பயிரச் செய்கைகள், விவசாயச் செய்கைகள், மரம் செடி கொடிகள் போன்றவற்றை நாசம் செய்து வருவதுடன், தமது குடியிருப்புக்களையும் சேதமாக்கி வருவதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39
news-image

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் இடமாற்றத்தை...

2024-04-18 15:29:41
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05