“இதயத்திற்கு இதயம்” இணையத்தளத்தை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி

Published By: Digital Desk 4

16 Feb, 2019 | 05:04 PM
image

“இதயத்திற்கு இதயம்” பொறுப்பு நிதியத்தின் புதிய இணையத்தளத்தை வெளியிடும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவால் இன்று (16) முற்பகல் ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெற்றது.

“இதயத்திற்கு இதயம்” பொறுப்பு நிதியத்தினால் இருதய நோயாளர்களின் சத்திர சிகிச்சைக்கான பணத்தை ஈட்டிக்கொள்வதற்கு வசதியற்ற மக்களுக்காக ஸ்ரீ ஜயவர்த்தனபுர  வைத்தியசாலையை கேந்திர நிலையமாக கொண்டு இயங்குகின்றது.

இலங்கையில் இருதய நோய்களை குறைப்பது இந்த நிதியத்தின் கொள்கையாவதுடன், இருதய நோய்க்கான சிகிச்சைகளை மேம்படுத்துவதனூடாக அதன் தரத்தை மேலோங்கச் செய்வது இதன் நோக்கமாகும்.

“இதயத்திற்கு இதயம்” நிதியம் தொடர்பிலான தகவல்களை இலகுவாக கண்டறிவதற்கு இந்த  இணையத்தளம் உதவியாக அமைவதுடன், இந்த நிதியத்தின் ஊடாக இருதய நோயாளிகளுக்கு நிதியை பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கான வசதிகளும் இந்த இணையத்தளத்தின் ஊடாக ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய இணையத்தளத்தை திறந்துவைத்த ஜனாதிபதி, அதன்பின்னர் இடம்பெற்ற விழாவில் கருத்து தெரிவிக்கும்போது இலங்கை கலாசாரத்தினுள் காணக்கூடியதாக இருக்கும் தியாக மனப்பான்மையானது மேற்கத்திய செல்வந்த நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருப்பதாகவும் தெரிவித்தார்.

அபிமானத்திற்குரிய வரலாற்றையும் கலாசாரத்தையும் அடிப்படையாக கொண்டு வலுப்பெற்ற மனிதாபிமான எண்ணங்களையும் குணாதிசயங்களையும் வேறு எந்த நாட்டினதும் கலாசாரத்தோடு ஒப்பிட முடியாது என்று தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், இவ்வாறான உன்னத சேவைகளுடன் இன, மத பேதமின்றி தியாக மனப்பான்மை கொண்ட அனைத்து இலங்கையர்களும் ஒன்றாக கைகோர்த்துக்கொள்வார்கள் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.

“இதயத்திற்கு இதயம்” செயற்திட்டத்தை பிரதேச ரீதியாக வியாபிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளமை தொடர்பில் ஜனாதிபதி அவர்கள் தனது மகிழ்ச்சியை வெளியிட்டார்.

இதயத்திற்கு இதயம் செயற்திட்டத்திற்காக உத்தியோகபூர்வமாக சிலர் ஜனாதிபதியிடம் நன்கொடைகளை கையளித்தனர்.

வைத்தியர் அதுல கஹந்தலியனகே, விசேட வைத்திய நிபுணர் றுவன் ஏகநாயக்க, விசேட வைத்திய நிபுணர் ராஜித டி சில்வா, இதயத்திற்கு இதயம் பொறுப்பு நிதியத்தின் தேசிய அமைப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ், ஜயவர்த்தனபுர  வைத்தியசாலையின் பணிப்பாளர் எச்.எம்.பீ.விக்ரமநாயக்க, பிரதிப்பணிப்பாளர் பிரபாத் வேரவத்த ஆகியோரும் அறிஞர்கள், கலைத்துறையினர் உள்ளிட்ட விசேட அதிதிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46