யாழிற்கு விஜயம் மேற்கொண்ட பிரதமரின் செயலாளரின் கைத்தொலைபேசி திருடப்பட்டது

Published By: Priyatharshan

15 Feb, 2019 | 08:12 PM
image

(ப. அகிந்தன்)

வடபகுதிக்கு 3 நாள்  விஜயம் மேற்கொண்டு யாழ்ப்பாணம் சென்றிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளரின் கைத்தொலைபேசி திருடப்பட்டுள்டளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் பற்றி மேலும் தெரியவதுவதாவது, 

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து சத்திர சிகிச்சை பிரிவு நேற்று (14.02.2019) திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்விலேயே பிரதமரின் செயலாளரின் 55,000 ரூபா பெறுமதியான கைத்தொலைபேசி திருடப்பட்டுள்ளது. 

இச் திருட்டுச் சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் செய்துகொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய பொலிஸார் இன்றைய தினம் (15.02.2019) யாழ்.நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ததுடன் திருடப்பட்ட கைத்தொலைபேசியிலிருந்த சிம்மின் மூலம் கைத்தொலைபேசி இருக்குமிடத்தினை அறிந்துகௌ்ள முடியும் என்பதால், அது தொடர்பான தகவல்களை வலையமைப்பு நிறுவனத்தை வழங்கும்படி உத்தரவிடுமாறு பொலிஸார் நீதிவானிடம் கோரிக்கை முன்வைத்தனர். 

இதனையடுத்து நீதிமன்றம் அதற்கான கட்டளை வழங்கியது. இந்நிலையில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15